• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

சனி பிரதோஷம்

siddharbhoomi by siddharbhoomi
July 1, 2023
in ஆன்மிகம்
0
சனி பிரதோஷம்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

சனி பிரதோஷம்

சனி பிரதோஷம் அன்று சிவனை இப்படி வழிபாடு செய்தால் அடுத்த

பிறவி என்பதே இருக்காதாம் துன்பம் நீங்கி இன்பம் பெருக இந்த நாளை

தவறவிடாதீர்கள்.

பிரதோஷ காலம் என்பது சிவனுக்கு உகந்த காலமாக இருக்கிறது.

பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுபவர்களுக்கு சகல,

சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மேலும் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கி, புண்ணியங்கள் சேர

பிரதோஷ வேளையில் சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை

செய்வது சிறப்பு. சனிக்கிழமை சனி பிரதோஷ சிவனை இப்படி வழிபாடு

செய்தால் அடுத்த பிறவி எடுக்காத அளவிற்கு நமக்கு முக்தி

கிடைக்குமாம்.
☘️
சனி மஹா பிரதோஷத்தில் சிவனை தரிசனம் செய்பவர்களுக்கு எல்லை இல்லாத இன்பம் வந்து சேரும். தெரிந்தோ, தெரியாமலோ சிவபெருமானை தரிசனம் செய்து வில்வ இலையால் அர்ச்சித்து விடுபவர்களுக்கு முக்தி கிடைக்கும் என்கிறது சிவபுராணம்.

அப்படியிருக்க ஒவ்வொரு சனி பிரதோஷம் அன்றும் நாம் முறையாக சிவனை வழிபட என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.
☘️
தான, தர்மங்களை செய்ய சனி பிரதோஷம் மிகவும் சிறந்த நாளாக கருதப்படுகிறது. இன்றைய நாளில் நீங்கள் செய்யும் சிறு தானம் கூட பெருமளவு பலன்களைக் கொடுக்கக் கூடியது. ரெட்டிப்பு பலன்களைக் கொடுக்கும் இந்த சனி பிரதோஷத்தை தவறவிடாமல் சிவ வழிபாடு மேற்கொண்டு பயனடையுங்கள்.

பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலுக்கு சென்று அங்கு நடக்கும் சிவபெருமான் அபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
☘️
அபிஷேக் அப்பொருளை உங்களால் முடிந்த அளவிற்கு வாங்கிக் கொடுத்து புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அன்றைய நாளில் நந்தி பகவானுக்கு சிறப்பான விசேஷ பூஜைகள் நடைபெறும்.

நந்தி பகவானுக்கு பிரதோஷ காலத்தில் அருகம்புல், வில்வ இலை மாலை சாற்றி, நெய் விளக்கு ஏற்றி, பச்சரிசி மற்றும் வெல்லம் கலந்து நைவேத்தியம் வைத்து வழிபாடு செய்து பாருங்கள்.

உங்களுடைய பிரார்த்தனைகள் எத்தகையதாக இருந்தாலும் அவைகள் உடனே தடையின்றி நடக்கும்.
☘️
மேலும் சாதாரண நாள் போல் பிரதக்ஷணம் செய்யாமல் சோமசூக்த பிரதட்சணம் மேற்கொள்ளுங்கள். சோமசூக்த பிரதட்சணம் என்பது நந்தி பகவானை வணங்கி விட்டு பின்னர் சிவனுக்கு அபிஷேகம் செய்த நீர் வெளியில் செல்லும் கோமுகி தீர்த்தம் இருக்கும் இடம் வரை சென்று வழிபட வேண்டும்.

பின்னர் மீண்டும் வந்த வழியே திரும்பிச் சென்று சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும். பின்னர் திரும்பவும் கோமுகி தீர்த்தம் இருக்கும் இடத்திற்கு சென்று வணங்க வேண்டும்.

இப்படி சோமசூக்த பிரதட்சணம் மேற்கொள்பவர்களுக்கு கேட்ட வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனை பிரதோஷ பிரதக்ஷணம் என்றும் அழைப்பது உண்டு. இந்த வரிசையில் 20 வகையான பிரதோஷங்கள் இருக்கின்றன.
☘️
சனிக்கிழமையில் வரும் பிரதோஷ காலத்தில் அடுத்த பிறவி இல்லாமல் இப்பிறவியே போதும் என்று நினைப்பவர்கள் தான, தர்மங்களை செய்து புண்ணியத்தை சேர்த்துக் கொள்வது இரட்டிப்பான பலன்களை கொடுக்கும்.

வீட்டிலும், கோவிலிலும் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து குளிர்விக்க வேண்டும். ஆலயத்தின் சன்னிதி திரையிட்ட நேரத்தில் வேறு எங்கும் செல்லாமல் இறைவனை நினைந்து சிவஸ்தோத்திரம் உச்சரிக்க வேண்டும்.

நாலரை மணி முதல் ஆறு மணி வரை சிவன் கோவில்களில் அமர்ந்து சிவனை நினைந்து மனதார வழிபட்டு வருபவர்களுக்கு வேண்டிய வரம் வேண்டியபடி நிச்சயம் கிடைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

Previous Post

மனவளம் தரும் குணசீலம்

Next Post

குனிந்த தலை நிமிராம?

Next Post
குனிந்த தலை நிமிராம?

குனிந்த தலை நிமிராம?

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »