நீண்ட ஆயுள் பெறவும் யமதீபம் ஏற்றுங்கள்.
மஹா பரணி பித்ருக்கள் நற்கதி அடையவும் நீண்ட ஆயுள் பெறவும் யமதீபம் ஏற்றுங்கள்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
பித்ருக்கள் பக்ஷம் எனப்படும் மஹாளய பக்ஷத்தில் நான்காம் நாளான சதுர்த்தி தினமான இன்று (02/10/2023) மஹா
பரணி எனும் முக்கிய தினமாக அனுஷ்டிக்க படுகிறது. மஹாபரணி” என்பது புரட்டாசி மாதத்தில் மஹாளய
பக்ஷத்தில் வரும் பரணி நக்ஷத்திரமாகும்.
🔥
பரணி நட்சத்திரம் என்பது யமதர்ம ராஜனின் நக்ஷத்திரம் ஆகும். இந்நாளில் இறந்த நம் முன்னோர்கள் எல்லாம்
அவரவர் கர்ம விணைக்க ஏற்ப யமதர்மனின் தீர்ப்புக்கு இணங்க சொர்க்கத்திற்க்கும் நரகத்திற்க்கும் செல்வார்கள்
என்பது நியதி ஆகும்.
யமதர்மனுக்கு உகந்த மஹாபரணி நக்ஷத்திர நாளில் முன்னோர்களுக்கு ஸிரார்த்தம், திதிகள், தர்பணம் செய்வது
மற்றும் யம தீபம் ஏற்றுவது போன்றைவைகளை செய்தால் யமதர்மன் மனம் மகிழ்ந்து நரகத்திற்க்கு செல்ல
வேண்டிய நம் முன்னோர்களின் வேதனையை குறைத்து சொர்க்கத்திற்க்கு அனுப்பி வைப்பார்கள் என ஐதீகம்.
🔥
மஹாளய பக்ஷம்:
🔥
மஹாளயம் என்றால் கூட்டமாக வருதல். மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மஹாளய பக்ஷம்.
“பக்ஷம்’ என்றால் 15 நாட்கள். மறைந்த முன்னோர் 15 நாட்கள் (சில சமயங்களில் 14 அல்லது 16 ஆக மாறுபடும்)
நம்மோடு தங்கும் காலமே மகாளய பக்ஷம். இது புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி,
அமாவாசை வரை நீடிக்கும்.
புரட்டாசியில் வரும் அந்த அமாவாசையே மஹாளய அமாவாசை எனப்படும். தை அமாவாசை, ஆடி அமாவாசை
ஆகியவற்றை விட உயர்ந்தது இது. மற்ற மாதங்களில் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம்
செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம்.
ஆனால், மஹாளய பக்ஷ காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
🔥
இறந்தவர்களின் ஆன்மாக்கள் பித்ரு லோகத்தில் இருந்து யமதர்மராஜனின் அனுமதியோடு பூலோகத்திற்கு வந்து
தனது சந்ததியினரையும், தெரிந்தவர்களையும் காண வரும் காலமே இந்த மஹாளய பட்சம் என்று
சொல்லப்படுகிறது.
இந்த பதினைந்து நாட்களும் முன்னோர்களின் நினைவாக சுபநிகழ்வுகளைத் தவிர்த்து அவர்களுக்குரிய சிராத்தம்,
தர்ப்பணம் ஆகியவற்றைச செய்வதால் அவர்களது ஆன்மாக்கள் சாந்தி பெறும் என்பது நம்பிக்கை
🔥
யம தீபம்:
மஹாளய பக்ஷத்தில் மஹா பரணியிலும் தீபாவளிக்கு முந்தைய தினத்தன்றும் யம தீபம் ஏற்றுவது நம் மரபு.
மரணபயம் நம்மைவிட்டு அகலவும் துர்மரணமின்றி அமைதியான மரணம் ஏற்படவும் யமதர்மராஜனை தவறாமல்
வழிபட வேண்டும்.
தக்ஷிணாயன புண்ய காலத்தில் வீடு தேடி வரும் முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை, மஹாளய பக்ஷம் மற்றும்
தீபாவளி அமாவாசை ஆகிய நாட்களில் தர்பணம் செய்வது மரபு. அவ்வாறு வருகை தரும் பித்ருக்களுக்கு.
அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “யம தீபம்” மட்டுமே. அவர்களை வழியனுப்பும்
பொருட்டு தீபமேற்றுதல் வேண்டுமாம்.
🔥
எம தீபத்தை வீட்டின் உயரமான இடத்தில் ஏற்றுவது வழக்கம். இதற்கு வசதி இல்லாதவர்கள். வழக்கமாக
ஸ்வாமிக்கு விளக்கேற்றும்போது, தனியே ஓர் அகல் ஏற்றி வழி படலாம். இதனால், முன்னோர்கள் மட்டுமின்றி
எமதர்மனும் மகிழ்ச்சி அடைவானாம்; விபத்துகள், திடீர் மரணம் போன்றவை சம்பவிக்காது. நோய் நொடி இன்றி
ஆரோக்கியமாக வாழலாம்! யம தீபமானது முக்கியமாக துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது.
அவர்கள் பிரச்சினைகள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு நலன்களைச் செய்வார்கள். என்றாலும் எவரேனும் இறந்தால் மட்டுமே யம தீபம் ஏற்ற வேண்டும் என்று எண்ணக் கூடாது. யம தீப வழிபாடாக, எட்டு அகல் விளக்குகளை ஆலயத்திலும், இல்லத்திலும், எட்டுத் திக்குகளிலும் தாமரைத் தண்டுத் திரிகளை வைத்து ஏற்றி, ஒவ்வொரு திக்காகப் பார்த்து, எட்டுத் திக்குகளில் நின்று, அந்தந்த திக்குகளை தேவமூர்த்தி, தேவதைகளை வணங்கிப் பிரார்த்திக்க வேண்டும்.
இவ்வாறு எட்டுத் திக்குகளிலும் நின்று பூஜித்து, யம தீப தேவதா மூர்த்திகளை உலக ஜீவன்களுக்கு உள்ள எமபயம், மரண பயம், மிருத்யு தோஷங்கள் அகலத் துணைபுரிவீர்களாக என்று வேண்டிட வேண்டும்.











