*சிதறிக் கிடக்கும் உன்னுடைய உணர்வின் இழைகளையெல்லாம் இழுத்து ஒரே ஒரு புள்ளியில், ஒரே ஒரு கருத்தில் செலுத்துவதே ஒரு முனைப்பு என்பது.*
பூரணமான கவன சக்தி உடையவர்கள் எடுத்த காரியம் யாவினும் வெற்றிபெறுவார்கள்; அவர்கள் எப்பொழுதும் வேகமாக முன்னேறுவார்கள். தசைகளை அபிவிருத்தி செய் வதைப் போலவே ஒருமுனைப்புச் சக்தியையும் அபிவிருத்தி செய்யலாம்;
இதைச் செய்ய வெவ்வேறு வகையான பயிற்சி முறைகள் இருக்கின்றன மிகவும் பரிதாபத்திற்குரிய நோஞ்சான்கூட முறையான பயிற்சியின்மூலம் மிகப் பெரிய பலவானுக்கு இணையாக வந்துவிடலாம் என்பது இன்று நம் எல்லோருக்கும் தெரியும் உன்னுடைய இச்சாசக்தி (மன உறுதி) மெழுகுவத்திச் சுடரைப்போல் ஆடிக்கொண்டிருக்கக் கூடாது.
இச்சாசக்தி, ஒருமுனைப்புத்திறன் இவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்; முறையான பயிற்சியின் மூலம் அதைச் செய்ய முடியும். நீ மனம் வைத்தால் முடியும்.
ஆனால் “பயிற்சி செய்து என்ன பயன்?” என்கிற எண்ணம் வந்து உன்மன உறுதியைப் பலவீன ப்படுத்தி விடக்கூடாது. ஒருவன் பிறக்கும்போதே சில குண நலன்களுடன் பிறக்கிறான், அதை மாற்றமுடியாது என்னும் கருத்து முட்டாள்தனமானது.
ஸ்ரீ அன்னை











