நெய்யை ஊற்றி சபரிமலைக்கு எடுத்து செல்ல ஏன் தேங்காயை பயன்படுத்துகிறார்கள்.?
ஏனென்றால் வேறு எந்த காயிலும் முக்கண் வடிவம் கிடையாது. சிவன், விஷ்ணு, பிரம்மா மூன்று தெய்வங்களும் முக்கண்ணில் இருக்கிறார்கள் என்பது ஐதீகம்.
நெய் கட்டியாக வேண்டும் என்று கலப்பட நெய், எருமை நெய், டால்டா கலந்த நெய் இவைகளை பயன்படுத்த கூடாது. தூய பசு நெய்யை தான் இருமுடிக்கு பயன்படுத்த வேண்டும்.
தூய பசு நெய் எங்கு கிடைக்கிறது என்று தாங்கள் வசித்துவரும் பகுதியில் உள்ள பழம் பெரும் குருசுவாமிகளை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
சபரிமலைக்கு விரதம் இருந்து இருமுடியில் எடுத்து செல்லும் நெய் தேங்காய் சிறப்பானதாகும். இதனால் இருமுடியே மகத்துவம் பெறுகிறது.
இருமுடி கட்டும் சமயத்தில், தூய பசு நெய்யை பாத்திரம் ஒன்றில் வைத்து சூடுபடுத்த வேண்டும். அதிகமாக சூடுபடுத்த கூடாது. நெய், எண்ணெய் பதத்திற்க்கு வந்தவுடன் இறக்கிவிடவேண்டும்.
பின்பு ஒரு தட்டில் பச்சரிசி தூவி அதன் மேல் தேங்காயை வைத்து சிந்தாமல், சிதறாமல் பொறுமையாக நாம் நம்முடைய வேண்டுதலை வைத்து பக்தியோடு நெய்யை நிரப்பவேண்டும்.
இச்சமயத்தில் சரண கோஷம் சொல்வது சிறப்பாகும். நெய் நிரம்பிய தேங்காயை தூய துணியால் துடைத்து தேங்காய் கண்ணை கார்க், அப்பளம்,காடாதுணி இவைகளின் மூலம்
இறுக்கமாக சீல் வைத்து அதன் விபூதி பூசி அதற்க்கு மஞ்சள் குங்குமம் இட்டு சிறிய துணி பையில் வைத்து கட்டி பிறகு, பையிற்க்கும் மஞ்சள், குங்குமம் இட்டு இருமுடியின் முன்முடியில் வைக்கவேண்டும். இருமுடி பையிற்க்கும் மஞ்சள் குங்குமம் வைத்து பூ சூட வேண்டும்.
வீட்டில் உள்ளவர்கள் வேண்டுதல் நெய் தேங்காய் கொடுப்பவராக இருந்தால் நெய் தேங்காய் கொடுப்பதற்கு முன் மூன்று நாட்களும் விரதம் இருக்க வேண்டும், சுவாமி சபரிமலைக்கு சென்று வந்த பிறகு நெய்யை பிரசாதமாக வாங்கிய பின்பு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
நெய் தேங்காய் கொடுப்பவர் சரியாக விரதம் இருந்தால் தான் நாம் சிரமமின்றி மலை ஏற முடியும். இது சத்தியமான உண்மை.
நாம் விரதம் எப்படி இருக்கிறோம் என்பதை இருமுடியில் எடுத்து செல்லும் நெய் தேங்காயை உடைத்தவுடன் தெரிந்து விடும்.
#Muscat to #Delhi Daily Special Offer..! www.aurobookings.com
197 Countries of the World ALL FLIGHT TICKTS EASY ONLINE BOOKING–✈
Search for cheap airline tickets
நிகழும் சார்வரி வருடம், ஆவணி மாதம் 6-ம் நாள் 22.08.2020 சனிக்கிழமை அன்று இல்லங்களில் விநாயகர் சதுர்த்தி பூஜை
நெய் தேங்காயை உடைக்கும் போது,
1. உருண்டையாக நெய் இருந்தால் விரதம் சரியாக இருந்திருக்கிறோம் என்பதை குறிக்கும்.
2. நெய்யை தேங்காயில் விரல் விட்டு எடுத்தால் விரதம் பரவாயில்லை என்பதை குறிக்கும்.
3. தேங்காயை உடைத்தவுடன் , இருமுடி சமயத்தில் நெய் ஊற்றிய போது எப்படி இருந்ததோ அதை போல் இருந்தால் விரதத்தை சரிவர கடைபிடிக்கவில்லை என்பதை குறிக்கும்.
இவை ,பழம் பெரும் குருசாமிகள் சொல்லியவை. விரதங்களை பக்தியோடு கடைபிடிக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லிய வார்த்தைகள்.பெரியவர்களின் சொல்லை நாம் மதித்து நடந்தால் எதிலும் ஜெயம் உண்டாகும்.
சுவாமிமார்களுக்கு ஒன்று சொல்லி கொள்கிறேன். நெய் கட்டவில்லை என்று கவலைபடவேண்டாம். குருப்பில் சென்று இருந்தால் கட்டிய நெய்யும், கட்டாத நெய்யும் ஒன்றாக ஒரே பாத்திரத்தில் எடுத்து சென்று நெய் அபிஷேகம் செய்வார்கள்.
சுவாமிமார்கள் அபிஷேகம் செய்த நெய்யை வீட்டிற்க்கு எடுத்துவந்து பிரசாதமாக அனைவருக்கும் கொடுக்கலாம்.
சுவாமியே சரணம் ஐயப்பா











