ஹிந்துக்களின் புலால் உண்ணும் முறைக்கு “ஜட்கா” என்று பெயர்.
சிறிது விளக்குகிறேன்
ஹிந்து மதம் அஹிம்சை விரும்பும் மதம். சைவம் .
புலால் உணவும் மறுக்கப்படவில்லை.
ஆனால் ஹிந்து மதத்தில் வலி ஏற்படுத்துவது ஏற்றுக்கொள்ள படாத ஒன்று.
கோயில்களில் பலி கொடுக்கும் போது கூட ஒரே வெட்டில் விலங்கை கொன்று விட வேண்டும் என்பது தான் முறை.
அதாவது அந்த விலங்கிற்கு தான் வெட்டப்பட்ட வலி தெரிவதற்கு முன்பே மரணம் எட்டி விடும்.
ஓங்கி வெட்டும் போது முதலில் தண்டுவடம் வெட்டுப்படும்படி பின்னங்கழுத்தில் வெட்டுவதால் உடனடி, மற்றும் வலி இல்லா மரணம்.
இந்த முறைக்கு “ஜட்கா” என்று பெயர்.
சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங் சீக்கியர்களுக்கு ஹிந்து முறையான “ஜட்கா” மாமிசத்தை மட்டுமே உண்ண வலியுறுத்தி உள்ளபடியால் பஞ்சாப் மாநிலத்தில் எல்லா கடைகளிலும் ” ஜட்கா” மாமிசம் என்ற பலகை இருக்கும்.
” ஜட்கா” மாமிசம் இல்லை என்று தெரிந்தால் ஒரு ஹிந்து சாப்பிட மாட்டார்.











