• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

நீதி நியாயம் கிடைக்கவில்லை என்று கவலைப்படுகின்றீர்களா ?

siddharbhoomi by siddharbhoomi
January 17, 2021
in கோயில்கள்
0
Arulmigu Vettudaiyar Kaliamman Temple,
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

நீதி நியாயம் கிடைக்கவில்லை என்று கவலைப்படுகின்றீர்களா ?

உங்களுக்கு நியாயமாக வர வேண்டிய சொத்து கிடைக்கவில்லையா, நியாயமாக கொடுத்த கடன் பணம் திரும்ப கிடைக்கவில்லையா ?யாரேனும் உங்களை ஏமாற்றி நகை பணம் தெரிந்தோ தெரியாமலோ எடுத்து கொண்டு தரவில்லையா ?

நீங்கள் முறையிட வேண்டிய தெய்வம் நீதி தேவதை கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் ” எவ்வளவு பெரிய தீயசக்தியாக இருந்தாலும் அதனை எல்லாம் அழித்து விடுவேன்”என்பது போன்ற தோற்றம்!

பொதுவாக காளி அம்மன் கிழக்கு அல்லது வடக்கு நோக்கிதான் இருப்பாள். ஆனால் இந்த கோயிலில் மேற்கு நோக்கி வெட்டுடையார் காளியம்மன் 8 கரங்களுடன் காலுக்கு கீழே அசுரனை வதம் செய்தபடி காட்சி தருகிறாள். மேலும் காளி தன் வலது காலை ஊன்றி இடது காலை தொங்கவிட்டு அமர்ந்துள்ளாள்.

இவள் வைத்திருக்கும் கத்தியும், கேடயமும், வில்லும், அம்பும் இன்னும் மற்ற ஆயுதங்களை தூர இருந்து பார்க்கும் போதே நமக்கு பயத்தை தோற்றுவிக்கும். எவ்வளவு பெரிய தீயசக்தியாக இருந்தாலும் அதனை எல்லாம் அழித்து விடுவேன் என்று பராசக்தியின் அம்சமான அவள் சொல்வது போல இந்த காட்சி அமைந்துள்ளது.

கொல்லங்குடி வெட்டுடையார் காளி நமது கவலைகள் தீர்ப்பாள் “சக்தி கவசம்”- , இன்னல்கள் விலக- – இன்று 15/1/2021 தை வெள்ளிக்கிழமை தேவர்களை துன்புறுத்திய அசுரனை வதம் செய்து காத்த போது பாடிய பாடல் பதிவு செய்து அம்மனின் திருவடிகளை சரணடைகிறேன். ஓம் சக்தி ஓம்

மதுரை நகரில் இருந்து சிவகங்கை செல்லும் வழியில் சுமார் 30 கிமி தூரத்தில் சிவகங்கை நகருக்கு 5 கிமி முன்பு அமைந்துள்ளது சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கொல்லங்குடியை அடுத்த அரியாகுரிச்சியில் அமைந்துள்ளது வெட்டுடையார் காளியம்மன் கோவில்.

திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, பவுர்ணமி நாட்களில் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். பொதுவாக காளி அம்மன் கிழக்கு அல்லது வடக்கு நோக்கிதான் இருப்பாள். ஆனால் இந்த கோவிலில் மேற்கு நோக்கி வெட்டுடையார் காளியம்மன் 8 கரங்களுடன் அருள் பாலிக்கிறார்.

அருகில் உள்ள ஆன்மீக ஸ்தலங்கள்:

தாயமங்களம் – அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் இத்திருக்கோயிலிலிருந்து 35 கி.மீட்டர்.

காளையார் கோவில் – அருள்மிகு காளீஸ்வரன் திருக்கோயில் இத்திருக்கோயிலிலிருந்து 7 கி.மீட்டர்.

நாட்டரசன்கோட்டை- அருள்மிகு கண்ணுடையநாயகி அம்மன் திருக்கோயில் இத்திருக்கோயிலிலிருந்து 9 கி.மீட்டர்.

கண்டிப்பட்டி- அருள்மிகு கேட்டவரம் தரும் குடியிருப்புக் காளியம்மன் திருக்கோயில் இத்திருக்கோயிலிலிருந்து 12 கி.மீட்டர்.

பட்டமங்களம் – அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில் இத்திருக்கோயிலிலிருந்து 27 கி.மீட்டர்.

பிள்ளையார்பட்டி – அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் இத்திருக்கோயிலிலிருந்து 45 கி.மீட்டர்.

திருக்கோஷ்டியூர்- அருள்மிகு சௌமிய நாராயணப் பெருமாள் திருக்கோயில் இத்திருக்கோயிலிலிருந்து 30 கி.மீட்டர்.

திருப்பத்தூர்- அருள்மிகு திருத்தனிநாதர் சுவாமி திருக்கோயில் இத்திருக்கோயிலிலிருந்து 40 கி.மீட்டர்.

வைரவன்பட்டி- அருள்மிகு பைரவ சுவாமி திருக்கோயில் இத்திருக்கோயிலிலிருந்து 50 கி.மீட்டர்.

திருவாடனை- அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் திருக்கோயில் இத்திருக்கோயிலிலிருந்து 37 கி.மீட்டர்.

காரைக்குடி- அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் மற்றும் அருள்மிகு கொப்புடையநாயகி அம்மன் திருக்கோயில் இத்திருக்கோயிலிலிருந்து 40 கி.மீட்டர்.

அரியக்குடி- அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில் இத்திருக்கோயிலிலிருந்து 45 கி.மீட்டர்.

மடப்புரம்- அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ர காளியம்மன் திருக்கோயில் இத்திருக்கோயிலிலிருந்து 48 கி.மீட்டர்.

அதாவது, அய்யனார் கிழக்கு நோக்கி இருக்க எதிரே சற்று தெற்கு பக்கத்தில் மேற்கு நோக்கிய நிலையில் காளியம்மன் உள்ளார். பெண்கள் தங்கள் கணவர் நலம்பெற வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள்.

பலர் தங்கள் கணவர் குணம் அடைந்ததும் தங்களுடைய தாலியை காணிக்கையாக செலுத்துகிறேன் என்று வேண்டுகிறார்கள். அதன்படி குணம் அடைந்த பின் தாலியை காணிக்கையாக செலுத்துகிறார்கள். இப்படி ஆண்டுதோறும் தங்க தாலிகள் பல இங்கு காணிக்கையாக வருகின்றன.

அங்கையிற் கரகம் தாங்கும் பிரமாணி அருளினோடும் துங்கம் என் சென்னி காக்க! வயிணவி துகளிலாகம் எங்கணுங் காக்க!

செய்ய வேந்தெழில் உருத்திராணி தங்குமெண்டிசையும்
அன்பு தழைத்திட இனிது காக்க!

கொன்னுனைச்சூலி சென்னி மயிரினைக் குறித்துக் காக்க!
மன்னு வெண்பிறை தாழ் சென்னி வயங்கொளி நெற்றி காக்க!

பன்மயிற் புருவம் நாளும் பரிவோடு உமையாள் காக்க!

என்னையாள் முக்கண் ஈசன் இறைவி கண்ணிமைகள் காக்க!
வயமிகு இமயவல்லி மூக்கினை மகிழ்ந்து காக்க!
செயையொடு விசயை மேல்கீழ் இதழினைச் சிறந்து காக்க!
வயலிடைச் சுறுதிதூய வஞ்செவி காக்க! கணணென் பயில்
மலருறையுஞ் செல்வி பல்லினை உவந்து காக்க!

சண்டிமென் கபோலங் காக்க!

தவள நாண்மலரின் வைகும் ஒண்தொடி நன் காக்க!

விசயை மங்கலை மற்றொவ்வாக் கண்கவர் நாடி காக்க!

காத்தியாயினி எஞ்ஞான்றும் முண்டக மலரில் தூய முகத்தினைச் சிறந்து காக்க!

களம் உண்டு இருண்ட நீல கண்டி மென்கழுத்துக் காக்க!
கோளில் பூதாரசக்தி சுவர்ப் புறங் காக்க! கூர்மி நீளொளி
கந்தி காக்க! ஐந்திரி நெறினோடும் தோளினைக் காக்க!
பத்மை துணை மலர் அங்கை காக்க!

கமலை கைவிரல்கள் காக்க! விரசை கையுகிர்கள் காக்க!
திமிர முண்டொளிரும் வெய்யோன் மண்டலத்து உறையுஞ்
செல்வி எமது இருவாகு மூலங் காக்க! வானவர்களேத்த அழிர்
தலகரி நாணாளு மகள் மணிமார்பங் காக்க!

திரித்திரி இதயங் காக்க! தயிர்த்தியர்ச் செகு போண்மிக்க
கருந்தொடு முலைகள் காக்க! சகத்தினிலிறைமை பூண்டோடு
இருத்தகு வயிறு காக்க! திகழ் தபோகதி தன்னுள்ளந் தருத்தின்
உந்தி காக்க! வசைவளர் முதுகு காக்க!

கருதருவி கடை காக்க! கடிதலம் பாமை வாய்ந்த குருமணிச் சகனங் காக்க!

குகாரணி குய்யங் காக்க! அருடர
வரும் அபாய கந்தினிய பாணங் காக்க! தெருளுடை
விபுலை யென்றும் சிறப்புடைக் குறங்கு காக்க!

லலிதை மென் முழந்தாள் காக்க! வியற்சபை
கணைக்கால் காக்க! களிதரு கோரை வாய்ந்த
பரட்டினைக் காக்க! மிக்க அளிகொள் பாதலத்திற்
செல்வோள் அணிகெழு புறந்தாள் காக்க!

ஒளிர்நகம் விரல்கள் சந்திரி உக்கி உவந்து காக்க! தலத்துறை
மடந்தை உள்ளங் காலினை காக்க! தண்ணென் மலர்திரு
மனையைக் காக்க! வயங்கு கேத்திரதை யோங்கி
உலப்பில் கேத்திரங்கள் காக்க!

பிரியகரை ஒழிவறாது நலத்தகு மக்கள் தம்மை நன்குறக் காக்க
வன்றே! உயர் சனாதனி எஞ்ஞான்றும் ஒழிவறும் ஆயுள் காக்க!

அயர்வறு கீர்த்தியாவும் மாதேவி காக்க!

மிக்க செயிரறு தருமம் யாவும் தனுத்திரி சிறந்து காக்க!

இயல்புடைக் குலத்தை வாய்ந்த குலதேவி காக்க!

சற்கதி பிரதை நல்லோரியைபினை தயாவிற் காக்க!

விற்கொடும் போரில் நீரில் வெளியினில் வனத்திற்

சூதில் இற்புதம் அதனில் ஓங்கு சர்வாணி காக்க!

வென்னாப் பொற்றரு மலர்கள் தூவிப் புங்கவர் ஏத்தினாரே!

நாள்தோறும் இத்திருக்கோயிலில் 100 நபர்களுக்கு என்ற திட்டத்தின் மூலம் அன்னதானம் நடைபெற்று வருகிறது. அன்னதானத் திட்டத்திற்கு நன்கொடை வழங்குவோர் கீழ்க்கண்ட முகவரிக்கு பணம் அனுப்பி வைக்கலாம்.

“நிர்வாகி,
அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில்,
அரியாகுறிச்சி,
விட்டனேரி (அஞ்சல்),
சிவகங்கை மாவட்டம்.”

Previous Post

மிக உயரமான மகா சனீஸ்வர பகவான்!

Next Post

எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வை

Next Post
Have faith in the future

எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வை

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »