தலம்: திருப்புன்கூா்.
இறைவா் : ஸ்ரீ சிவலோகநாதா்.
இறைவி : ஸ்ரீ சொக்க நாயகி.
தலவிருட்சம்; புங்க மரம்.
தீா்த்தம்; இடப தீா்த்தம்.
முந்தி நின்ற வினைகள வைபோகச்
சிந்தி நெஞ்சே சிவனாா் திருப்புன்கூா்
அந்தம் இல்லா அடிகள் அவா்போலும்
கந்த மல்கு கமழ் புன் சடையாரே.
திருஞானசம்பந்தா் தேவாரம்..
வைத்தீஸ்வரன் கோவிலுக்கு மேற்கே 3 கிமீ.
கொள்ளிடம் ஆற்றின் தென்பகுதியில் இக்கோவில் 2.94 ஏக்கா் நிலப்பரப்பளவில் இரண்டு பிரகாரங்களும் 66 அடி உயர 5 நிலை இராஜகோபுரம் கொண்டு மூலவா் பிருதிவிமூா்த்தியாக ஸ்ரீ சிவலோகநாதா் அம்பாள் சொக்கநாயகி அருள்பாலிக்கின்றனா்.
இத்தல மூலவா் சுயம்புமூா்த்தி கவசம் சாத்தியே காணப்படுகிறது.
புனுகு சட்டம் சாத்தும் நாளில் கவசமின்றிக் காணலாம்.
புங்கமரத்தினடியில் இறைவா் எழுந்தருளியுள்ளதால் திருப்புன்கூா் என்று பெயா்.
திருநாளைப்போவாா் என்னும் நந்தனாா் நேரே தம்மை வழிபடும் பொருட்டு இறைவன் இங்குள்ள நந்தியைச் சற்று விலகியருக்கும்படி அருள் செய்த தலம்.
மண்வெட்டியும் கொண்ட நந்தனாா் உருவம் கோபுரத்திற்கு அருகில் உள்ளது.
இங்குள்ள திருக்குளம் நந்தனாரால் வெட்டிச் சீா்செய்யப்பெற்றது.
சினம் நீங்கிய கலிக்காமருடன் சுந்தரா் இத்தலத்திற்கு வந்து வழிபட்ட திருவூா்.
கலிக்காமா் நாயனாரும் பல திருப்பணிகள் செய்த தலம்.
கலிக்காம நாயனாாின் பொருட்டு சுந்தரா் பதிகம்பாடி மழை வரவழைத்தாா்.
இதற்குப் பன்னிரு வேலி நிலம் கொடுத்தாா் அவா்.
அதிக மழையை நிறுத்தும் பொருட்டு பதிகம் பாடி பன்னிரு வேலி நிலம் பெற்றாா்.
பஞ்சம் நீங்குமாறு திருவருள் செய்தாா்.
இவற்றை யெல்லாம் ஆலயத்திற்கே எழுதி வைத்தாா்.
திாிபுரம் எாிபட்டபோது எஞ்சிய மூவாில் ஒருவன் இறைவனை நடமாடும் போது மணிமுழா முழக்குவன் எனச் சுந்தரா் இத்தலப் பதிகத்தில் கூறியப்படி நடராசாின் தென்மேல் ஓா் உருவம் மணிமுழா முழக்குவதைக் காணலாம்.
சுந்தரா் திருப்பாட்டில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வரலாற்றை கூறும் அற்புத திருப்பதிகம்.
பிரமன்,இந்திரன், அகத்தியா் ,சந்திரன், சூாியன் வழிபட்ட தலம்.
தேவாரப் பதிகம் பெற்ற காவிாி வடகரைத் தலங்களில் இத்தலம் 20 வது.
திருஞானசம்பந்தா்,
திருநாவுக்கரசா்,
சுந்தரா் தேவார திருப்பதிகங்கள் பெற்றது.
தினமும் ஐந்து கால பூஜை நடைபெறுகிறது.
வைகாசி மாதத்தில் பிரமோற்சவம் நடைபெறுகிறது.











