அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில்..!
பூலோகக்கைலாசம் #கங்காஆரத்தி #முதன்மைமுக்திதலம் #அருள்மிகுகாசிவிஸ்வநாதர் திருக்கோயில்..!
☘️அமைவிடம் :
☘️
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி என்னும் இடத்தில் அமைந்துள்ளது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமானால் உருவாக்கப்பட்ட நகரம் காசி. இவ்வூருக்கு வாரணாசி, மகாமயானம், அபிக்தம், ஆனந்த பவனம் ஆகிய பெயர்களும் உள்ளன.
மிகவும் பழமை வாய்ந்த நகரம். வாரணா, ஹசி என்ற நதிகளுக்கும் இடையில் இவ்வூர் அமைந்துள்ளதால் வாரணாசி என்ற பெயர் வந்தது.
☘️
#மாவட்டம் :
☘️
அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், காசி, வாரணாசி மாவட்டம், உத்தரப்பிரதேசம் மாநிலம்.
☘️
#எப்படி_செல்வது?
☘️
இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து தொடர்வண்டி மூலம் காசியை சென்று அடையலாம்.
☘️
#கோயில் சிறப்பு
☘️
இந்தியாவில் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் காசியே முதன்மையானது, அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது மணிகர்ணிகா சக்தி பீடம் ஆகும். இங்குள்ள மூலவர் மரகதத்தால் ஆனவர் என்பது தனி சிறப்பு.
☘️
காசியில் இறந்து போவது சொர்க்கத்தைத் தரும் என்று சொல்வார்கள். இங்கே இறந்து போகும் பறவைகள், மிருகங்கள் மற்றும் சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் ராமநாமத்தை சிவனே ஓதுகிறார் என்பது ஐதீகம். ஓம் என்ற பிரணவத்தை ஓதுவதாகவும் சொல்லப்படுவதுண்டு.
☘️
கங்கா ஆரத்தி :
☘️
காசியில் மற்றொரு சிறப்பம்சம் கங்கை நதியை வணங்கும் வகையில் தினந்தோறும் கங்கா ஆரத்தி எடுக்கப்படும். காசிக்குச் செல்பவர்கள் தவற விடக்கூடாத ஒன்று கங்கா ஆரத்தி.
☘️
மும்மூர்த்திகளும், தேவர்களும், விஸ்வநாதரைப் பூஜித்த தலம் காசி ஆகும்.
☘️
முக்தி சிவ-தலங்கள் ஏழினுள் காசி தலையாய முக்தித் தலம் ஆகும். ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது, காசி-இராமேஸ்வரம் யாத்திரை மேற்கொள்ளும் சிறப்பு மிக்க தலம் காசி ஆகும்.
☘️
பூலோகக் கைலாசம் என்று போற்றும் தலம். காசிக்கு நிகரான தலம் மூவுலகிலும் இல்லை. ஈசன் காக்கும் மகாமயானம் இங்கே உள்ளது. காசியில் இறப்போர் உடனே மோட்சம் அடைவார்கள். காசி என்று சொன்னாலே புண்ணியம் கிடைக்கும்.
☘️
#கோயில் திருவிழா
☘️
தை அமாவாசை, ஆடி அமாவாசை, தீபாவளி (அன்னக்கொடி உற்சவம்), ஹோலிப் பண்டிகை, சிவராத்திரி, நவராத்திரி ஆகிய விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றன.
☘️
#பிரார்த்தனை
☘️
திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.
☘️
கங்கையில் நீராடினால் நமது தேகம் புனிதம் அடைகிறது. விஸ்வநாதரைத் தரிசித்தால் உயிர் புனிதம் அடைகிறது. ஞான வாவியைத் தரிசித்தால் அறிவு புனிதம் அடைகிறது.
☘️
#நேர்த்திக்கடன்
☘️
பக்தர்கள் இங்குள்ள தீர்த்தக் கரையில் தம் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்து நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். வேண்டுதல்; நிறைவேறியவர்கள் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புத்தாடை அணிவித்தும், சிறப்பு பூஜைகள் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.











