அலைகள் போல் தொடரும் எண்ணங்கள் ஒரு புறம்… அடுத்தடுத்து எதிர் கொள்ள வேண்டிய கடமைகள் ஒரு புறம்… என, மூச்சுவிடும் நேர இடைவெளி கூட இல்லாத வாழ்வைத்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இந்த சலிப்பு மிகுந்த உலக வாழ்வை சற்று ஒதுக்கி வைத்து விட்டு, என்றும் அமைதியையும்… ஆனந்தத்தையும்… நல்கும் உள் வாழ்வை நோக்கிய
‘ஆத்ம ஞான பயணத்தை’… நாம் உண்மையாக விரும்பும் போது, நமது கவனம் இறைவனின் திருவடிகளை நோக்கித் திரும்புகிறது.
இந்த நேர்மையான நோக்கத்திற்காகவே காத்திருக்கும் இறைவன், நமது ‘ஆன்மீகத் தகுதிக்கு ஏற்ப’, தக்கதொரு துணையை, நமக்கு நல்குகிறான். அந்தத் துணை, இறைவனாகவோ…
இறை மூர்த்தங்களில் ஒன்றாகவோ… இறைவனின் அவதாரமான அவதார புருஷனாகவோ. இறையனுபவத்தை அனுபவித்து, அந்த அனுபவத்திலேயே மூழ்கித் திளைக்கும் மகானுபாவராகவோ இருப்பார்.
இந்த மகா புருஷரின் தொடர்பு… இறைவனுக்கும் நமக்கும் இடையேயான ‘ஆத்மார்த்த தொடர்பினால் ‘விளைந்ததேயன்றி… நமது தேடுதாலால் மட்டும் விளைந்தன்று… இந்தத் துணையைத்தான், ‘சத்குரு’ என்று அழைக்கிறோம்.
உங்கள் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் பார்வேர்டு செய்யவும். இந்தப் பதிவு அவர்களுக்கு மிக உபயோகமாக இருக்கும்.
இதுவும் ஒரு வகையான ஞானதானம் (அந்தப் புண்ணியம் உங்களுக்கு வந்து சேரும்) அனைவரும் இறைவன் காட்டும் வழியையும் வழிமுறைகளையும் பின்பற்றுவோர் சிக்கலில் இருந்து வெளி வந்து விடுகின்றனர் – என்றும் இறைபணியில் சித்தர் பூமி











