திருமண நிகழ்ச்சியில் மணமக்கள்
அம்மி மிதிப்பது ஏன்?
அருந்ததி பார்ப்பது ஏன்?
இந்து சமய திருமண முறைகள் மிகவும் பழமையான மற்றும் பாரம்பரியமான சடங்கு முறைகள்.
இவ்வாறு செய்யும் பல சடங்குகளுக்கு நாம் அர்த்தம் என்ன என தெரியாமல் செய்து வருகிறோம். நம் இந்து சமயத்தின் அத்தனை சடங்குகளும் ஆழமான அர்த்தங்கள் கொண்டவை,
எனவே தான் கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலினை எழுதி நமது சமயத்தின் பெருமையை நாடு அறிய செய்தார்.
திருமண சடங்குகளின் ஒரு நிகழ்வு அம்மி மிதித்து அருந்ததி நட்சத்திரத்தை பார்ப்பது போன்ற ஒரு சம்பிரதாயம் உண்டு.
பெண்ணின் கழுத்தில் மங்கல நாண் (தாலி) சூடிய கணவன் மணப்பெண்ணைப்பார்த்து, இனி நான் உனது உயிர்மூச்சாகவும் கல்லைப்போல மன உறுதியுடனும் இருந்து உன் வாழ்க்கைக்கு வழிகாட்டுவேன் என்பதை, வசிஷ்ட மகரிஷியின் சாட்சியாக உன் காலை அம்மிமீது வைத்து அதன் சாட்சியாக உன் காலில் மெட்டியைச் சூட்டுகின்றேன் என்று கூறுகின்றான்.
மணப்பெண்ணானவள், தன் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவனுக்கு அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டி அருந்ததியைப்போல் ஏழு ஜன்மங்களிலும் உமக்கு மட்டும் மனைவியாக இருப்பேன் என்று சத்யப்பிரமாணம் செய்கின்றாள்.
அருந்ததி என்பது ஒரு ஜோடி நட்சத்திரம் ஆகும், ஆனால் பூமியில் இருந்து பார்க்கும்போது அது ஒரு நட்சத்திரம் போல தெரியும். அதுபோல மணமக்கள் இரு உடலாக இருந்தாலும் அவர்கள் ஒரு மனமாக வாழ்ந்தால் வாழ்க்கையில் எந்த பிரச்னையும் வராது என்பது இதன் உட்பொருள் ஆகும்.
நமது சிவபெருமான் தனது உடலின் ஒரு பகுதியை பார்வதி தேவிக்கு தந்து அர்தநாரீஸ்வராக இதை தான் உணர்த்துகிறார்.
உங்கள் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் பார்வேர்டு செய்யவும். இந்தப் பதிவு அவர்களுக்கு மிக உபயோகமாக இருக்கும்.
இதுவும் ஒரு வகையான ஞானதானம் (அந்தப் புண்ணியம் உங்களுக்கு வந்து சேரும்) அனைவரும் இறைவன் காட்டும் வழியையும் வழிமுறைகளையும் பின்பற்றுவோர் சிக்கலில் இருந்து வெளி வந்து விடுகின்றனர் – என்றும் இறைபணியில் சித்தர் பூமி











