அறிவை அறிவால் அறிந்தவர்கள் சித்தர்கள்
பஞ்சபூதத் தத்துவம் சித்தர்நூல் முறைப்படி உலகத்தில்
உலகத்தில் உள்ள சடப் பொருள்களுக்கு எல்லாம் பஞ்சபூதமே ஆதாரமாக உள்ளது . உடல் அழிந்தால் ஐம்பூதங்களும் வெவ்வேறாகப்
பிரிந்து போகும் . ஐம்பூதங்களால் ஆக்கப்பட்ட மனித உடம்பும் அது இறந்தவுடன் அவனின்று பிரிந்துவிடும் . அம்மனித உடம்பு
பின்வருமாறு ஐம்பூதங்களால் ஆக்கப்பட்டுள்ளது .
1. மண், எலும்பு , சதை , நரம்பு , தோல் , மயிர்
2. தண்ணீர் பித்தம் , இரத்தம் , விந்து , கசிவு அல்லது கழிவு , வியர்வை
3. நெருப்பு பசி , தாகம் , தூக்கம் , அழகு , சோம்பல்
4. காற்று சுருக்கம் , விரிவு , அசைவு
5. ஆகாசம் இதயம் , கழுத்து ,
கழுத்து , தலை இவற்றில் உள்ள இடைவெளிகள் உயிர்கள் அனைத்தும் இறுதியில் பஞ்சபூதங்களாக மாறுகின்றன .
இப்பூதங்கள் ஒன்றோடொன்று சேர்ந்து சீவ அணுக்கள் ஆகின்றன . இவற்றில் இருந்து உடம்புக்குரிய பொருட்கள் அனைத்தும்
ஏற்படுகின்றது .
இரண்டாவது இச்சீவ அணுக்களே தங்களுக்கு உள்ள தொழில் இயற்றும் சக்தியால் உடம்பிற்கும் மனத்திற்கும் வேண்டிய
அம்சங்களைக் கொடுக்கின்றது . ஆகவே உடம்பின் படைப்புக்கு ஆதாரமான தொழில்களே வாதமாகும் ; பாதுகாப்புக்கு
வேண்டியதே பித்தமாகும் . அழிவுக்கு ஏதுவான தொழிலே கபமாகும் .
சீவ அணுக்களின் கலப்பினால் முக்குணம் என்ற சத்துவம் , இராஜசம் , தாமசம் ஆகியவற்றின் தொழில்கள் நடத்தப்படுகின்றது .
ஆத்மா , மனது , உடம்பு என்ற மூன்றும் சேர்ந்தது புருசம் எனப்படுகின்றது . இது மனத்தையும் உடம்பையும் தொழில் இயற்றவும்
பிரதிபலன் தூண்டவும் செய்யும் . உடம்பில் எழும் சக்திக்கு ஆன்மாவே காரணமாகும் . இருப்பினும் இது ஒரு பற்றுமின்றி ஒன்றுக்கும்
அசையாமல் தனித்து நிற்கும் .
சீவஅணுக்கள் நரம்பில் இருந்து எழும்பி , உடம்பைப் பூரணநிலைக்குக் கொண்டு வருகின்றது . உண்ணும் உணவு அன்னரசமாகி
இரத்தத்தைச் சேருகின்றது . அதன் பிறகு அதில் இருந்து உடம்பில் சதை , கொழுப்பு , எலும்பு , கடைசியாகப் பசையாக , விந்தாக
மாறும் .
இத்தொழில்கள் தொடர்ந்து நடைபெறும் போது வாதபித்தகபம் என்ற முப்பிணிகள் தோன்றுகின்றன . வாதபித்தகபம் ஆகியவை
உடம்பைக் காத்தலால் இவற்றை ஆதாரத் தாதுக்கள் என்பர் . இவை தன்நிலை மாறும்போது அதாவது கெடும்போது உடல்
சதைபாகங்கள் நல்ல நிலையில் இருக்காது .
மனிதனுக்குள் சூக்கும சக்திகள் மூளையிலும் , முதுகுத் தண்டின் கயிற்றுக்குள்ளும் இருக்கும் . இதுவே மனிதனுக்கு உள்ள
மூச்சு ( பிராண ) சக்தியாகும் . இம் மூச்சு சக்தியாகிய வாதத்தோடு பித்த கபம் கூடினால் முப்பிணி உண்டாகும் .
அதுபோது திரிதோசத்தின் காரணம் , குறிகள் , குணங்கள் ஆகியன அறிந்து இவற்றைச் சரியான நிலைக்குக் கொண்டுவருதல்
வேண்டும் . நோய்க்கான காரணம்
காலம் , அறிவு , புலன் இவற்றின் தொழில்கள் குறையின்றி இருந்தால் உடல் நலமாக இருக்கும் . எனவே நோய் என்பது உடல்நோய் ,
மனநோய் என இரண்டு வகைப்படுகின்றது . ஒன்றே மற்றொன்றுக்குக் காரணம் . அதாவது மனநோய் உடல் நோய்க்கு
இடங்கொடுக்கும் . இவ்விரண்டுக்கும் உடலின் கூறுபாடே ஆதாரமாக உள்ளது .
மேலும் பரம்பரை வழியாயும் நோய் ஏற்படும் . இது சித்த முறைப்படி முற்பிறவி அல்லது முன்னோர் செய்த வினைப்பயன்களால்
ஏற்படுவதாகும் . காலச்சக்கரத்தில் அறியக் கூடாத காரணங்களால் தாய் குழந்தைகளை இது பிற்காலத்தில் தாக்கும் . சித்தர்
நூல்களின் சிறப்பு
மனிதன் மனத்தினால் அதிகமாகத் தூண்டப்படுகின்றான் . ஆன்மா மனத்தின் மூலசக்தியின்வழி இயங்குவதால் அதிக வலிமை
அடைகின்றது . சித்தர் நூல்களில் உள்ள உண்மைகள் யாவும் அவர்கள் தியானத்தால் கண்டறிந்தவையாகும் .
அண்டமும் பிண்டமும் ஒன்றே அறிந்துதான் பார்க்கும்போது என்று சட்டமுனி நிகண்டில் கூறியுள்ளபடி , மனிதனது இரத்தத்தாது
செவ்வாய்க்கோளை அனுசரித்ததாகும் . ஆத்மநிலைகள் சுக்கிரனுடைய ஆதரவை ஒட்டி நிற்கும் .
சித்தர் முறைப்படி , மனிதனானவன் ஐம்பூத அம்சம் ; கோள் அம்சம் ; பிரகிருதியின் மூலத்தில் உண்டாகி உடம்பில் உள்ள ஏழு
தத்துவங்களையும் கொண்ட ஆன்மாவைப் பொருந்தியவன் . இவன் கடவுளுக்கு மிக நெருங்கிய தொடர்புடையவன் . ஞானிகள்
உலகை ஆட்டுவிக்கும் சக்தி இன்னதென்று அறிந்தவர்கள் . உ
10 வெகுதூரத்து நிகழ்வுகளையும் தியான சிருஷ்டியால் கண்டறிபவர்கள் . இவர்களது நூல்கள் உலகத்தையே தன்வசமாக்கிக்
கொள்ளக்கூடிய சக்தியை மனிதனுக்கு அளிக்கின்றது . இது தெய்வத்தன்மை பொருந்திய உள்மனிதனை இனங்காட்டுகின்றது ;
மனிதன் நீண்ட காலம் வாழலாம் என்பதைக் கற்பிக்கின்றது .
எக்காலத்திலும் எவரும் ஏற்கும் அறிவுடைய தாகவும் , முக்காலத்திற்கும் பயனுடையதாயும் உள்ளவையே உண்மையான நூல் என்று
கருதப்படும் . சித்தர் நூல்கள்
உண்மையை ஆதாரமாகக் கொண்டவை . எனவேதான் அவை இன்றும் என்றும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் தகுதியைப்
பெற்றுள்ளன . சித்தர்களின் யோகநெறி
யோகம் ஒன்றினால்தான் பிறப்பு இறப்பை வெகுவிரைவில் சுருக்கமாக முடித்துக் கொள்ள முடியும் . இவ்யோகம் குருவால் தொட்டுக்
காட்டப்பட வேண்டும் . அப்படியில்லாவிட்டால் உடம்பிற்குக் கெடுதி ஏற்படும் .ஆனால் – மாசற்ற தூய மனத்தினை உடையவருக்கு
அவரது மனமே ஒரு குருவாகத் தனக்குள் நின்று காட்டிக் கொடுக்கும் .
ஏனெனில் தெய்வ பக்தி மேலுக்கு ஓங்கத் தன்னைத் தானறிவதற்கு உண்டான அறிவு விளக்கமும் மேம்பட விருத்தியாகும் .
பஞ்சபூதங்களை யோகிதான் தன்ஆளுகைக்குட்படுத்த முடியும் . ஆகவே இயற்கையில் உண்டான பேதங்களையும் மாற்றலாம் .
சிருஷ்டி வகையில் எவ்விதமான வடிவமும் எடுக்கலாம் .தன்னுடைய உடம்பையே போக்கவும் செய்யலாம் .
குண்டலினிக்கு உள்ளே வலியும் , நரம்பு சக்தியும் தகுந்தபடி இல்லாவிடில் இதயம் துடிக்காது ; நுரையீரல் மூச்சுவிடாது ; உடம்பில்
இரத்த ஓட்டம் உண்டாகாது ; மற்ற உறுப்புகளும் தனக்குரிய தொழில்களைச் செய்யாது .
மனிதனுக்குள் உண்டான காந்த சக்தியால் உலகத்தாரைத் தன் வசமாக்கவும் , ஒரு நாட்டு வகுப்பினர்களைத் தன் ஆட்சிக்கு
உள்ளாக்கவும் செய்யலாம் .
இதற்குச்சாதாரணமான பிராணாயாமத்தால் உண்டான வலிவே காரணமாகும் . சித்தர்களின் தத்துவ ஞானம்
உலகப் படைப்பில் மனிதன் ஒருவனுக்கே அனைத்து விதச் சக்திகளும் உடம்பினுள் மறைந்துள்ளது . இச்சக்தியால் மனிதனைக்
கடவுளின் ஆற்றலுக்குச் சமமாகவே சொல்லலாம் . இச்சக்தி மாயையால் மறைக்கப்பட்டுச் சரியான பாதையில். செல்லவிடாமல்
தடுக்கும் . அப்படித் தடுக்காதபடி செய்துவிட்டால் இயற்கை சக்தியானது தனது முழுவலிமையைக் காட்டும் .
பஞ்சபூதங்கள் , ஆறாதார நிலைகள் , மூன்று நாடிகள் , முக்குணங்கள் இவை முதலான 96 தத்துவங்கள் ஆத்மாவிற்கு ஆதரவாய்
உள்ளன . சித்தர்களின் மனசிந்தனை
எண்ணம் , சொல் , செயல ஆகிய மூன்றும் நேர்கோடானால் மனம் நினைப்பது நடக்கும் ; கேட்பது கிடைக்கும் ; வலிமை பெறும் .
மனம் தெளிவானால் மனிதனின் வளர்ச்சிக்குத் தடையே இராது . மனத்தைக் கல்தூண்போல் உறுதியாக்க யோகம் தேவை
என்கின்றார் இடைக்காட்டுச் சித்தர் .
ஒரு குறிப்பிட்ட சாதனையை அடைவதற்காக உடம்புக்குப் பயிற்சி தருதல் போல மனத்திற்குப் பயிற்சி தருவது மனப்பயிற்சியாகும் .
ஒரு பொருளின் நுட்பம் அதிகமாக அதிகமாக அதன் சக்தி அதிகமாகும் என்பது அறிவியலாளர் கூற்று . மண்ணைவிட நீர் , நீரைவிட நெருப்பு , நெருப்பைவிடக் காற்று , காற்றைவிட வான் நுட்பமானவை ; சக்தி மிக்கவை .
அதுபோல் உடலைக் காட்டிலும் மனம் நுட்பமானது ; ஆற்றல்மிக்கது . உடற்பயிற்சியில் சாதிக்க முடியாதவற்றை மனப்பயிற்சியில் சாதிக்க முடியும் . சித்தர்கள் அட்டமாசித்திகளைச் செய்ய முடிந்ததற்குக் காரணம் மனப்பயிற்சியே ஆகும் .
சித்தர்கள் உடல் , மனம் , ஆன்மா ஆகிய மூன்றும் தூய்மை பெறுவதற்கான வழிமுறைகளைக் கூறி மனப்பயிற்சிக்கு வழிகாட்டி உள்ளனர் . மனிதனின் சிந்தனைகள் உயிரணுக்களின் மின் சாரதி தாக்குதலிகளாலும் , கவர்ச்சிகளாலும் பிறக்கின்றன
என்பது இன்றைய அறிவியலாளரின் கண்டுபிடிப்பாகும் . உள்ளத்து இயல்புகளில் காணும் வேறுபாடுகளுக்கு ஏற்பவே புறத்தோற்றத்தில் காணும் வேறுபாடுகள் அமையும் . சித்தர்களின் அறிவியல் பார்வை
வாதபித்த ஐய மருந்துகள் இன்றைய அறிவியலோடு ஒத்தவை . திருக்க நெறியில் அமைந்த அறிவியல் எனச் சித்தர்களின் உண்மைகளை இன்றைய அறிவியலாளரும் ஒப்புக் கொள்கின்றனர் .
நாபி எனும் நவபாடாணத்தைப் பசுவின் மூத்திரத்தில் போட்டு 24 மணிநேரம் ஊறியபின் பயன்படுத்தினால் அது இதயத்துடிப்பை ஊக்குவிக்கின்றது . ஆனால் ஊற வைக்காமல் அப்படியே பயன்படுத்தினால் அது இரத்த ஓட்டத்தைக் குறைத்து ஆளைக் கொன்றுவிடுகின்றது .
வேதியல் மாற்றம் பசுநீரால் மாறுவதை அறியும்போது சித்தர்களின் சித்து அறிவியல் முறையிலானது என அறிய முடிகின்றது .
அகத்தியர் நயனவிதி 500 என்ற நூல் 26 அறுவை மருந்துக் கருவிகளைப் பற்றிக் கூறுகின்றது . நாகமுனிவர் நயனவிதி என்ற நூல் கண் அறுவைசிகிச்சை பற்றிக் கூறுகின்றது . அறுவைக்கான கருவிகளைப் புளிய இலையைப் போட்டுக் கொதிக்க வைத்த நீரினால் சுத்தம் செய்து இருக்கின்றனர் .
பழனிமலை கோவிலில் உள்ள முருகன் சிலை நவபாடாண மூலிகையால் போகரால் உருவாக்கப்பட்டது . இது அவரின் இராசயன அறிவை எடுத்துக் காட்டுகின்றது .
இதனுடைய அபிடேகம் , தீர்த்தம் முதலியன கர்ப்ப நோயை விலக்குகின்றது ; குழந்தைச் செல்வம் கிடைக்கச் செய்கின்றது . இதுபோன்ற பல நடந்த உண்மைகளை அறியமுடிகின்றது .
சித்தர்களால் கூறப்பட்ட மூலிகை தாவர அறிவாலும் , மருத்துவச் சிந்தனைகளாலும் பல அரிய நோய்களுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியுமெனப்
அறிவியல் ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன .
உலோகம் , தாதுப்பொருள் , மூலிகை போன்றவற்றைத் தக்க சமயத்தில் பெற்று உரிய தட்பவெப்ப நிலைகளில் வைத்து உகந்த முறையில் பயன்படுத்தப் பருவங்களைப் பற்றிய அறிவு அவர்களுக்கு இருந்தது . தாவரங்கள் வளரும் புவியைப் பற்றிய அறிவையும் பெற்று இருந்தனர் .
நித்திய கல்யாணி போன்ற இன்னும் பல மூலிகைகள் புற்றுநோயைத் தீர்க்கின்றன , ஆவாரை இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவைக்
குறைக்கின்றது . இவைபோல் குப்பைவேளை , புதினா, கருநெல்லி , நிலவேம்பு , பொன்முசுட்டை , கீழாநெல்லி போன்ற பல தாவரங்களை ஆய்வு செய்து அதன் மருத்துவப் பண்புகளை வெளிப்படுத்தி உள்ளனர் . உடம்பில் உள்ள
உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றியும் , இயல்பு பற்றியும் , அமைப்பு பற்றியும் அகத்தியர் சமரச கலைஞானம் என்ற நூல் கூறுகின்றது .
ஒரே ஒரு நரம்பில் காணப்படும் மூவகைத் துடிப்புகளை உணர்ந்து அவற்றை விலங்கு , பறவை போன்றவற்றின் செயலுக்கு
இணையாக ஒப்புநோக்கிச் சித்தர்கள் குறித்துள்ளனர் . பல அறிவியல் விளக்கத்தை உள்ளடக்கியதாக நாடி பற்றிய செய்திகள் அமைகின்றன என்கின்றார் அறிஞர் ப.மு. வேணுகோபால் . சித்தர்களின் அணுச்செயல் மாற்றம் ( மரபணு மாற்றம் )
ஒரு பொருளின் கருவைச் சிதைப்பதன் வாயிலாக அப்பொருளை வேறுபொருளாக மாற்ற முடியும் . நம் உடம்பு ஒளி புகாப்பொருள் ஆகும் . இதை யோகப் பயிற்சியால் ஒளிபுகும் பொருளாக மாற்றினால் கண்ணுக்குப் புலனாகா வடிவைப் பெற முடியும் .
வள்ளலார் ஒரு முறை நீதிமன்றம் வந்தபோது அவரைப் புகைப்படம் எடுத்தனர் . படச்சுருளை எடுத்துப் பார்த்தபோது அது வெள்ளையாக இருந்தது என்பர் .
எனவே கூடுவிட்டுக் கூடு பாய்தல் , சிறிய உருவத்தைப் பெரிய உருவமாக்குதல் , பெரிய உருவைச் சிறிய உரு ஆக்குதல் போன்ற அட்டமாசித்துகள் இன்றைய மரபணுமாற்றம் செய்யும் முயற்சிகளை ஒத்த கருத்துகளாக உள்ளன .
இன்று பரிசோதனைக் குழாயில் செயற்கை முறையில் குழந்தை உண்டாவதை நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம் . இந்த அறிவியல் உண்மையைச் சித்தர்கள் முதலே கண்டு கூறியுள்ளனர் . கருப்பையில் இருந்து குழந்தை பிறப்பது யோனிமுறை .
அதுபோல் கும்பம் வழியாகக் குழந்தையை உருவாக்குவது கும்பமுறை ஆகும் . கும்பமுறை
நாதம் , விந்து , கந்தகம் , ஆண் , பெண் பாதரசங்கள் அடங்கிய கற்பத்துடன் மேற்சொன்ன பொருட்களில் ஒன்றாகிய செயநீரால் பாதரசம் , கந்தகம் , முப்பு ஆகிய மூன்றையும் வெண்ணையாக்கி , 1 கற்பம் உண்டாக்க வேண்டும் .
அதைக் கும்பம் போன்ற பாத்திரத்தில் வைத்து மூடவேண்டும் . கும்பத்தில் சீலைமண் செய்து கும்பத்தின் ” வாய்க்கு ஊசியால் இரண்டு மூன்று துளைகள் போட வேண்டும் . பின் இருட்டறையில் 300 நாள் வைக்க வேண்டும் . 300 நாள் ஆனதும் கும்பத்தில் குழந்தை உருவாகும் . கற்பு மருந்துகளில் நாதம் , விந்து ஆகியவை 4 : 3 எனும் விகிதத்தில் கலக்கப் பெற்றால் உருவாகும் குழந்தை ஆண் , பெண் என்றாகும் .
இம்முறையில் உருவாகும் குழந்தை மூன்றரையடி உயரம்தான் வளரும் . இம்முறையில் உருவான அகத்தியர் , குள்ளமானவர் என்பர் . அதனால்தான் அகத்தியரைக் கும்பமுனி , கலசமுனி , குள்ளமுனி என அழைக்கின்றனர் . கலசத்தில் வைக்கப்பட்ட பொருட்களில் ஒன்றான கந்தகத்தின் பெயரே கந்தன் என்று முருகனைக் குறிப்பதாகக் கூறப்படுகின்றது .
இதன்வழி இன்றைய Test Tube Baby முறை அன்றே இருந்தது தெரியவருகின்றது . எனவே இன்றைய அறிவியல் வெற்றியை அன்றே சித்தர்கள் அடைந்துள்ளனர் .
இப்படிச் சித்தர்கள் உயிரின் மூலங்களைக் கண்டறிந்து உள்ளனர் . அது எந்தப் பொருளின் சேர்க்கையால் உண்டானது எனத் தெரிந்து உள்ளனர் . அவற்றைக் கொண்டு கற்பங்களைத் தயாரித்து உள்ளனர் . கற்பத்தைக் கொண்டு கும்பமுறையில் குழந்தையை உருவாக்கியுள்ளனர் ( தமிழில் மருத்துவ இலக்கியங்கள் , ப .320 ) .
துரும்பைப் பெருந்தூணாகத் தோற்றச் செய்குவோம் ஆணைப் பெண்ணும் பெண்ணை ஆணுகும் ஆகச்
செய்குவோம் ஆராவாரித்து எதிராய் நின்று ஆடுபாம்பே ( பா .27 ) என்று பாம்பாட்டிச் சித்தர் பாடுகின்றார் . இப்பாடல் ஆணைப் பெண்ணாக , பெண்ணை ஆணாக மாற்ற முடியும் என்கின்றது . இது இன்று நவீன அறிவியலில் செயற்கை அறுவை மருத்துவம் வழி நடைமுறைப்படுத்தப்படுகின்றது .
சித்தர்கள் எட்டுவகைச் சித்துகளில் வல்லவர்கள் . தம் விருப்பப்படி அணுவின் செயல்களை மாற்றிக் காணும் ஆற்றல் பெற்றவர்கள் . அறிவியலில் அணுக்கரு சிதைவு Neuclear Fission ) எனும் முறையின்படி ஒரு பொருளின் கருவைச் சிதைப்பதன்வழி அப்பொருளை வேறு பொருளாக மாற்ற முடியும் எனக் கண்டுள்ளனர் .
ஒரு பொருளைப் பற்றிய அறிவும் , அப்பொருளின் கருவைப் பற்றிய அறிவும் பெற்றவர்கள் எப்பொருளையும் மாற்றியமைக்கவும் உயிரற்ற பொருளுக்கு உயிரைத் தரவும் முடியும் .
மனிதர்களுக்கு D.N.A. என்ற உயிர்ப்பொருள் இன்றியமையாக் கருவாக உள்ளது . இதுவே இயல்புகளையும் குணங்களையும் நிர்ணயிப்பது என்பது அறிவியலார் கூற்று . எனவே ஒவ்வொரு உயிரின் D.N.A. வைப் பற்றியும் தெளிவாகத் தெரிந்து கொண்டால் D.N.A. கருவை மாற்ற முடியும் .
அப்படி மாற்றத் தெரிந்து கொண்டால் வேண்டிய வடிவங்களில் மாற்றிக் கொள்ள முடியும் . இதைத்தான் திருமூலர் கூடுவிட்டுக் கூடுபாய்தல் என்கின்றார் . இறந்த பொருளுக்கு உயிருட்டித் தன்உயிரை அதில் புகுத்துவது .
மீண்டும் தன்னுடலில் உயிரைச் சேர்ப்பது ஆகிய அரியகலையில் வல்லவராகத் திருமூலர் விளங்கினார் என்பது திருமூலர் வரலாற்றில் நாம் அறிந்ததாகும் .
சித்தர்களின் உடற்கூறு , உடலியக்கம் , மருந்து வேதியியல் , நோய்நாடல் , நோய் முதல் நாடல் முறை , மருந்தியல் , அறுவை மருத்துவம் , மருந்து மூலிகையியல் , வேதகம் , காயகல்ப அறிவியல் , யோகமுறை , சாகாக்கலை போன்றன அறிவியல் ஆய்வுக்கு உரியன என்கின்றார் மூலிகைமணி க . வேங்கடேசன் ; இன்றைய மேனாட்டு மருத்துவ முறையில் காணப்படும் அறிவியல் நெறிக்கு ஏற்பவும் அமைந்துள்ளது என்கின்றார் ; இவற்றுக்கான சான்றுகளையும் தருகின்றார் . சித்தர்நெறி
அறிவை அறிவால் அறிந்தவர்கள் சித்தர்கள் . மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும் நோயின்றி வாழ மருத்துவம் கூறியவர்கள் . மனித வாழ்க்கை முறைகளையும் , அதன் தத்துவங்களையும் தெளிவாக அனைவருக்கும் புரியும்படி கூறியவர்கள் .
இத்தகைய ஞானநிலையைக் கடுந்தவத்தின் மூலமாகத்தான் எய்தமுடியும் .
ஒழிந்தேன் பிறவி யுறவெனும் பாசம் கழிந்தேன் கடவுளும் நானும் ஒன்றானேன் ( திரு .2958 )
இதுவே சித்தர் நெறியாகும் . ஆன்மவலிமையே மனத்திற்கு உறுதியான வலிமையைக் கொடுக்கும் . அதுதான் உடலுக்கு உறுதியையும் வலிமையையும் கொடுக்கும் . அதுதான் மனிதனின் உண்மையான வலிமை . மனிதன் வலிமை பெறுவதற்கும் , நேர்மையான வழியில் நடப்பதற்கும் பல நெறிமுறைகளைச் சித்தர்கள் சொல்லியுள்ளனர் .
வாழ்வில் துன்பத்தைத் தவிர்க்கச் சிலவற்றைச் செய்யக்கூடாது . உலகம் எப்படி இருக்க வேண்டும் என்று நாம் தீர்மானிக்கக் கூடாது . நாம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்ற தேவையற்ற கட்டுப்பாடுகளும் நமக்குத் தேவையில்லை .
திருமந்திரம் சித்தர் நெறியைப் பற்றிக் கூறும் சீரியநூல் , சித்தர்கள் கண்ட நெறி சிக்கல் பல மிகுந்தது . எனவே அது பற்றி அறிய வேண்டுவது இன்றியமையாததாகின்றது . சித்தர்கள் உண்மையில் வாழ்ந்தனர் ; வாழ்கின்றனர் .
இவர்கள் மனித மேம்பாட்டிற்கு வழிவகுத்தனர் .
மருத்துவம் , சோதிடம் , மாந்திரிகம் யோகமுறைகள் , ஞானம் , வாசியோகம் , சமயம் , தத்துவம் , இரசவாதம் போன்ற பல துறைகளைப் பற்றி இவர்கள் பேசியுள்ளனர் . இவர்கள் கூறியதைப் பின்பற்றினால் நோயில்லா உலகம் , மாசுபடாத வாழ்க்கை போன்ற நல்வழிகளை அடைய முடியும் . ஒவ்வொருவர் உள்ளும் சீவன் சிவலிங்கமாக உள்ளது .
எனவே மனிதன் தன்னை , தன் ஆற்றலை உணரும்போது அவனே இறைவன் ஆக முடியும் என்ற பேருண்மையை உணர்த்தியுள்ளனர் .
சித்தத்தைச் சிவன்பால் வைத்து , பரம்பொருளையே எப்பொழுதும் தியானித்து , தியானித்துச் சீவனே சிவமாக மாறியவர்கள் ; சீவாத் மாவே பரமாத்மா என்பதை உணர்த்தியவர்கள்;
உடலில் உயிர் சூட்சுமத்தை அறிந்து சக்தி நிலையைத் தெரிந்து , புரிந்து ஞானநிலையில் பூரணமான சக்தியைப் பெற்றுச் சுவாசத்தின் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும் ; திலர்த காலத்தில் உள்ளொளியைக் காணவேண்டும் என்று கண்டறிந்தவர்களாவர் .
தமிழ்நாட்டுச் சித்தர்கள் சாதி , மத , இன வேறுபாடுகளைக் கடந்தவர்கள் . கருவூரார் ஓர் அந்தணர் ; இராமதேவர் இசுலாமியர் . இவர்கள் மனித நலனில் அக்கறை கொண்டு மூடநம்பிக்கைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள் ; சிவவாக்கியர் சாதியாவதேதடா ? சலந்திரண்ட நீரெலாம் என்கின்றார் . இவர்கள் வெட்டவெளி
தன்னை மெய் யென்று உணர்ந்தவர்கள் . சித்தர் என்ற சொல் சித்தி பெற்ற அனைவரையும் குறிக்கின்ற சொல்லாக உள்ளது . உலகியலைத் துறந்தவர்கள் , உலகியல் நடப்புக்கு மாறானவர்கள் . சித்துக்கள் ஆடுவதில் வல்லவர்கள் . சித்தத்தைச் சிவன்பால் வைத்தவர்கள் . அலைபாயும் சித்தத்தை அடக்கியவர்கள் .
கூடுவிட்டுக்கூடு பாய்தல் என்ற கலையைக் கற்று அதனைச் செய்து காட்டியவர்கள் . உலகம் அனைத்தையும் சிவமயமாகக் கண்டவர்கள் . பிறப்பறுத்தவர்கள் , யான் , எனது என்னும் செருக்கை அறுத்தவர்கள் . 36 தத்துவப் படிகளையும் கடந்து உள்ளொளிப் புக்கு சிவம் கண்டு அனைத்தும் சிவமே என்று அறிந்தவர்கள் . சிவம் எங்கும் நிறைந் துள்ளது .
அது போல் இவர்களும் எங்கும் நிறைந்திருப்பவர்கள் . / அனைத்தையும் சிவன் செயலாகவே காண்பவர்கள் . இந்தச் சித்தர்கள் எப்பொழுதும் மூச்சை அடக்கித் தியானத்திலே இருப்பர் , அறிவுடைய சாத்திரங்களை உணர்ந்திருப்பர் .
எந்த நாட்டில் எந்த மூலையில் எது நடந்தாலும் அதனை அறியக்கூடிய ஆற்றல் பெற்றிருப்பர் . எண்வகைச் சித்துமூலம் கூடுவிட்டுக் கூடுபாயும் கலையை அறிந்தவர்கள்.











