துதிக்கும் அடியவர்க் கொருவர்
கெடுக்க இடர் நினைக்கின்
அவர் குலத்தை
முதல் அறக் களையும்
எனக்கோர் துணையாகும்
திருத்தணியில் உதித்தருளும்
ஓருத்தன் மலை விருத்தன்
என துளத்தில் உறை
கருத்தின் மயில்
நடத்து குகன் வேலே…….
தன்னை புகழ்ந்து போற்றும்
அடியார்களை யாராவது கெடுக்க
நினைந்து அவர்களுக்கு துன்பம்
இழைக்க மனதில் நினைத்த
மாத்திரத்திலேயே
அந்த பகைவரது குலத்தையே
வேருடன் அழித்து விடும்
எனக்கு ஓப்பற்றப் பெருந்துணையாகி
வேல் அருள் பாலிக்கும்
( ஆகவே வேலை
வணங்குவதையே வேலையாக
கொண்டவர்களுக்கு மற்றவர்களால்
எந்தவிதத்திலும் துன்பம் அனுகாது)
வேல் துணை
கந்தன் வேல் துணை
கருணை வேல் துணை
வெற்றி வேல் துணை
பகைவர்களை அழிக்க
வந்த வீரவேல் துணை
வேலும் மயிலும் துணை











