பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் மாசி மாத தேய்பிறை ஏகாதசி
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
மாசிமாத தேய்பிறை ஏகாதசியான இன்றைய ஏகாதசி ஷட்திலா என்று அழைக் கப்படுகிறது. இன்று பசியால் வாடுபவர்களுக்கு அன்னதானம் செய்தால், நமக்கு அடுத்து வரும் சந்ததியினரும் வறுமை, பசி என்னும் நோயால் பாதிக்கப்பட மாட்டார்கள்.
🌺
அன்று பூஜை வழிபாட்டில் கொய்யாப்பழம் வைத்து வழிபடுவது நல்லது. ஷட்திலா ஏகாதட்சியில் காலணி, கூடை, கரும்பு, நீருடன் தாமிரக்குடம், பசு என ஆறு பொருள்களைத் தானம் செய்தால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதிகம்.
🌺
ஆறு பொருள்களை தானம் செய்வதாலேயே, இந்த ஏகாதசி ஷட்திலா என்று அழைக்கப்படுகிறது. ஏழை பிராமணருக்கு இரும்பு வடை சட்டியும், எள்ளும் கூட தானமாக கொடுக்கலாம்.
🌺
ஒவ்வொரு ஏகாதசி விரதமும், பொதுவான பலன்களை அளித்தாலும், தனிப்பட்ட பலன்களையும் சேர்த்தும் வழங்குகிறது. அந்த வகையில், மாசி மாத ஏகாதசி வழி பாடு, முன்னோர்களின் முக்திக்கு வழி வகுக்கும்.
🌺
பிரம்மஹத்தி தோஷம் தாக்கியிருந்தால் நீங்கும். வாழ்வில் விரக்தி நிலையை நீக்கும். அகால மரணமடைந்தவர்கள் மோட்சம் பெற மாசி மாத ஏகாதசி வழிபாடு உதவும்.
🌺
ஆண், பெண் என்ற பாகுபாடின்றி, அனைவரும் இந்த விரதத்தைக் கடைபிடிக்கலாம். முக்கியமாக, பெண்கள் மாதவிடாய் காலத்திலும், பிறப்பு, இறப்பு போன்ற தீட்டு காலங்களிலும் கூட, ஏகாதசி விரதத்தை விடாமல் தொடரலாம்.
🌺
சனிப் பிரதோஷம் போல பூசம், புனர்பூசம், திருவோணம், ரோகிணி நட்சத்திரங்கள் அன்று வரும் ஏகாதசியும் முக்கியத்துவம் பெற்றது.
🌺
ஏகாதசி அன்று கடவுளை வழிபட சிறப்பான பூஜைகளை மேற்கொள்வது நல்லது. ஆனாலும் இயலாதவர்கள் ஏகாதசி அன்று உண்ணாமல் விரதம் இருப்பதால், உடல் சோர்வை அதிகரித்துக்கொள்ளாமல் வீட்டிலேயே இறைவனை தியானித்து, விஷ்ணு புராணம், பாகவதம் போன்றவற்றை படிக்கலாம்.
🌺
உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக கொண்டு, பரமாத்மாவை மனதில் உருவேற்றிக் கொண்டே இருந்தால் விஷ்ணுவின் அருளைப் பெறலாம்.











