சித்திரை மாதம் தேய்பிறை அஷ்டமி சனாதன அஷ்டமியாக கடைபிடிக்கப்படுகிறது.
☘
#பைரவருக்குண்டானபொதுகாயத்ரி
☘
சுவாநத் வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தந்தோ பைரவ பிரசோதயாத்
☘
பைரவரின் காயத்ரியை அஷ்டமி தினத்தில் சொல்லி வரலாம். அருகில் இருக்கும் ஆலயத்துக்குச் சென்று பைரவரை வழிபடலாம். நவக்கிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் சகஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும்.
வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில் ராகு கால நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமோ, சகஸ்ரநாமமோ அர்ச்சனை செய்து 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். அஷ்டமிகளில் தொடர்ந்து வழிபடவேண்டும்.
☘️
சனிக்கிழமை அன்று வரும் தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு நாகலிங்கப்பூ மாலையைச் சாற்றி, எள் கலந்த அன்னம், பால் பாயசம், mகருப்பு திராட்சை நிவேதனம் செய்து அர்ச்சித்தால் சனி பகவானின் அனைத்து தோஷங்களும் நீங்கும்.
☘️
#முக்கிய_குறிப்பு
நாளை காலை 10.07 am அஷ்டமி திதி ஆரம்பித்து ஞாயிறு காலை 07.55 am க்கு முடிகிறது அஷ்டமி ராகுகால பூஜையில் கலந்து கொள்வோர்கள் இந்த அஷ்டமிக்கு ராகு கால நேரம் வராது சனிக்கிழமை எமகண்ட (01.30 to 03.00 ) நேரத்தில் கலந்து கொள்ளவும்.
நன்றி
ஓம் நம சிவாய











