அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் (திருச்சீரலைவாய்) 2023 – மாசிப் பெருவிழா அழைப்பிதழ்
“வந்தவினையும் வருநீன்ற வலவினையும்
இந்தனென்று சொல்லக் கலங்கிடுகம் – செந்தில் நகர்த் வகா! என்று இதநீறு அணிவார்க்குகுமர குருபரர் சுவாமிகள்
இமவ வாராயித வினை”
தண்டமிழ்க் கடவுள். செந்தமிழ் முருகன் கோயில் கொண்டுள்ள படைவீடுகள் ஆறினுள் இரண்டாவதாகப்பெருமை பெற்று விளங்குவது “திருச்சீரலைவாய்” எனும் திருச்செந்தூராகும்.
இவ்வூரின் தொன்மைப் பற்றியும் செந்தூர்க்கந்தனின் திருவருட் சிறப்புப் பற்றியும் ஞானிகளும், புலவர்களும் பலபடப் புகழ்ந்துள்ளார்கள், வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில்” எனப் புறநானூறும், “திருமணி விளக்கின் அலைவாய்” என அகநானூறும்,
“சீர்கெழுச்செந்தில்” எனச் சிலப்பதிகாரமும், “உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீரலைவாய்” என நக்கீரரும், “பவளத்துங்கப்புரிசைச் செந்தில்” எனத் திருப்புகழும் நந்தூர் அலைவாய் செந்தூருக்குப் “புகழாரம்” சூட்டியுள்ளன.
அகத்தியர், அப்பர், அருணகிரிநாதர், ஆதிசங்கரர், பகழிக்கூத்தர், குமரகுருபரர் ஆகியோர் பாடிப் பரவியத் தொன்மையான தலம் இது. தேவரும் மூவரும் யாவரும் போற்றிடுஞ் செந்திப்பதிபுரக்கும் செவ்வேளின்,
மாசிப் பெருந்திருவிழா நலந்திகழ் சுபகிருது ஆண்டு 1198 மாசித்திங்கள் 13ம் நாள் முதல் மாசி 24 ம் நாள் முடிய (25.02.2023 சனிக்கிழமை முதல் 08.03.2023 புதன்கிழமை முடிய) நடைபெறும்.
இப்புகழ் மிக்க மாசிப்பெருவிழாவில் ஏழாம் திருநாளன்று எழில்மிகு ஈராறுகரத்தான் ‘உருகுசட்டசேவை’ முடிந்து வெற்றிவேர் நிறைந்த விண்மணிச்சப்பரத்தில் உலாவரும் நிகழ்ச்சியும்,
அதன்பின் அறுபடை வீடுறை அழகர் ஆறுமுகர் ஆனிப்பொன் சப்பரத்தில் செம்பட்டணிந்து செம்மலர் சூடி செம்மேனியுடன் வரும் காட்சியும், எட்டாம் திருநாள் காலை வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளுடை அணிந்து வெண்ணிறப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலாவரும் காட்சியும், அதே நாளன்று
பச்சைமயில் வாகனன் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சைப்பட்டாடை உடுத்தி பச்சை இலை மற்றும் மரிக்கொழுந்து மாலை அணிந்து, “முரசு இடி முழங்கி வர, மூதாதையர்கள் பாடி வர, நகரா முழங்கி வர, நாதசுரம் இசைத்துவர, பாலாணர் பண்ணிசைக்க, பக்தர் குழாம் சூழ்ந்து வர” பவனி வரும் காட்சி ஒரு கண்கொள்ளாக்காட்சி! இது இறை அற்புதத்துக்கோர் சாட்சி!!
கயிலை மலையனையச் சீர்கெழுச் செந்திற்பதி வந்தடைந்து செந்தூர்ச் சேந்தனைச் சிந்தை நைந்துருகி சந்ததமும் வந்துதித்தால் வெந்துயர் நீங்கும்! தீராத வல்வினையும் செந்தளாய்ப் போகும்!
பன்னீரிலையில் திருநீற்றைப் பரிந்தளிக்கும் பற்றற்றார் பற்றும் பரமன் அடிதொழுதால் பல்கோடி சன்மப்பகையும், பல்கோடி விக்கினமும், பல் பிணியும், பல்கோடி பாதகமும் பொடிப்பொடியாய்ப்போகும்.
“திருமலி அலைவாய் நகருறை முருகன் திரைகடல் முழங்கும் செந்திலாதிபன் திருவருள் வாரிதியில் திளைத்துக்களித்திடத் திருச்செந்தூர் நோக்கித் திரண்டு வாரீர்” என அன்போடு அழைக்கின்றோம். மு. கார்த்திக், B.SC, B.L,
இணை ஆணையர் /செயல் அலுவலர்
அளிதாகுமரன், வி.செந்தில்முருகன் ந.ராமதாஸ், பா.கணேசன்
இரா. அருள்முருகன் அறங்காவலர் குழுத் தலைவர்
(திருவிழா சிறப்புகள் அறங்காவலர்கள்
(1. கொடிப்பட்டம் திருவீதி உலா: 24.02.2023 ஆம் நாளன்று மாலை 4.30 மணிக்கு மேல் கொடிப்பட்டத்தை வடக்கு தேர் வீதியிலுள்ள 14-ஊார் செங்குந்தர் 12ம் திருவிழா மண்டகப்படியில் வைத்து பூஜைசெய்து யானை மீது வைத்து வலம் வருபவர் திரு.கிருஷ்ணமூர்த்தி தீட்சிதர்.படிச்செப்பு ஸ்தலத்தார். திருச்செந்தூர்.
2. அப்பர்பெருமான்முதல் திருநாள் (25.022023) அன்று பிற்பகல் திருச்செந்தூர்வாழ் ஓதுவார் மூர்த்திகள் குழுவினரின் தேவார இன்னிசையுடனும் உழவாரத் திருப்பணியுடனும் சிறிய தங்கச்சப்பரத்தில்
எழுந்தருளி ஊர்வலமாய் வந்து திருக்காட்சியருளல்.
3. குமரவிடயப்பெருமான் தெய்வானையுடன் 2-ஆம் திருநாள் முதல் 12-ஆம் திருநாள் முடிய ஒவ்வொரு நாளும் அருள்மிகு விநாயகர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்,
சண்டிகேசுவரர் முதலிய மூர்த்திகளுடன் எழுந்தருளி அழகுடன் திருவீதி வலம் வந்து திருக்காட்சியருளல்,
4. அருளாமிகு ஜெயந்திநாதர் 2-ஆம் திருநாள் முதல் 10-ஆம் திருநாள் முடிய ஒவ்வொருநாளும் பகலில்தங்கச்சப்பரத்திலும், இரவில் வெள்ளிச் சப்பரத்திலும் எழுந்தருளி அழகுடன் திருவீதி வலம் வந்துதிருக்காட்சியருளல்,
5. 3,4,5,-ஆம் திருவிழாக்களில் காலையில் சரவண ஐயர் நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியரின் விநாயகர் சரசுவதி தோத்திரப் பாராயணம் நடைபெறும்,
6. 2-ம் நாள் திருநாள் முதல் 12-ஆம் திருநாள் முடியதிருக்கோயில் வேதபாடசாலை ஆசிரியர் திரு. கி.பாலசுப்பிரமணிய கனபாடிகள் மற்றும் மாணவர்களின் வேதபாராயணம் நடைபெறும்.
தேவாரம் 1-ஆம் திருநாள் முதல் 12-ஆம் திருநாள் முடிய ஒவ்வொரு நாளும் திருக்கோயில் ஓதுவார் திரு திருஞானசம்பந்தன், திருபா கோமதிசங்கர், திரு.வை மூக்கையாநயினார்,
7. திரு-இரா, தில்லைநடராஜன் குழுவினரின் தேவார இன்னிசையுடன் கலையரங்கத்தில் காலையிலும், மாலையிலும் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும். 2-ம்நாள் திருவிழா முதல் 12-ம் திருவிழா முடிய செந்தில் முருகன் தேவார சபையாரின் தேவாரமும்நடைபெறும். ஒவ்வொரு நாளும் வீதி உலாவின்போது திருக்கோயில் நாதகர விந்வான திரு.குண்டலமணி. தவில் வித்வான் திரு.ந.செல்வம் குழுவினரின் நாதகர இன்னிசை நடைபெறும்.
8. திருப்புகழ்:2,5,7,8,12-ம் திருநாட்களில் செந்தில் முருகானந்த சாங்கித் திருப்புகழ் சபையாரின் திருப்புகழ் சபையாரின் திருப்புகழ் பாராயணமும் நடைபெறும். திருப்புகழ் பாராயணமும் 2,4.7.12 ம் திருநாட்களில் செந்தில் திரு பாலசுப்பிரமணிய சங்கீத
௨. அனுக்ரஹசித்தே சுட்டியம், திரு. ஈராமநாதன் அய்யர், கட்டியம் திரு. க.சே. காசி விஸ்வநாத அய்யர்
10. வேதபாராயணம், புரோகிதம். ஆசீர்வாதம் திரு. சே.ச. சேதுராமசுப்பிரமணிய வாத்தியார்
11. 2-ஆம் திருநாள் முதல் 10-ஆம் திருநாள் முடிய ஜெயந்திநாதர் வீதி உலாவின்போது செந்தில் திரு. சோ. சுப்பையா குழுவினரின் பேண்ட் வாத்திய இன்னிசை நடைபெறும்.
12. திருவிழா முணர்த்தப் பட்டோலை இத்திருக்கோயில் விதாயகர்த்தா திரு. இரா. சிவராம சுப்பிரமணிய சாஸ்திரி,











