மணத்தக்காளி இலைகளை பறித்து, தேவையான அளவு நெய்யுடன் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும் .பின்னர் துவையல் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
மணத்தக்காளியின் பசுமையான இலைகளை மென்று சாற்றை விழுங்கலாம். இதே போல் ஒரு நாளைக்கு 5 முதல் 6 இலைகளை பச்சையாக மென்று சாப்பிட்டால் வாய்புண் வேகமாக குணமாகும்.
கோவைக்காயை வாரம் இரண்டு நாள் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும். பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிவிடும். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.
தினமும் மூன்று வேலை கொய்யா இலையை மென்று அதன் சாற்றினை விழுங்கி வந்தால் வாய் புண் குணமாகும். வாழை பூ உணவில் சேர்த்து கொண்டால் வயிற்று புண் மற்றும் வாய் புண் குணமாகும். அதிகமான காரம் சேர்த்துக் கொள்வது தவிர்க்க வேண்டும்.











