• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

அருள்மிகுசமயபுரம் மாரியம்மன்கோயில்.

siddharbhoomi by siddharbhoomi
March 28, 2021
in கோயில்கள்
0
Arulmigusamayapuram Mariamman Temple.
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

அருள்மிகுசமயபுரம் மாரியம்மன்கோயில்.

#அமைவிடம்

கண்ணனூர், விக்கிரமபுரம், மாகாளிபுரம் ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படும் இந்தத் தலம், திருச்சிக்கு வடக்கில் சமயபுரத்தின் கண்ணனூர் அருகில், பெருவளை வாய்க்காலின் கரையில் மகாசக்தி தலமாக விளங்குகிறது.

#மாவட்டம்
சமயபுரம், திருச்சி மாவட்டம்.

#எப்படி_செல்வது?
அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் திருச்சிராப்பள்ளி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நகரிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருச்சி நகர சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்தும், மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்தும், நகரப்பேருந்துகள் திருக்கோயில் வரை வந்து செல்கின்றன.

#கோயில்_சிறப்பு
இத்திருத்தலத்தில் மட்டும்தான் பக்தர்கள் தெய்வத்தை நோக்கி விரதம் இருக்கும் மரபு மாறி, மாரியம்மன் தன்னை நாடி வரும் மக்களின் நலன் வேண்டியும், அவர்களுக்கு எந்த தீயசக்தியாலும் பாதிப்பு வராமல் காக்கவும் முப்பெரும் தெய்வங்களான மும்மூர்த்திகளை நோக்கி பச்சைப்பட்டினி விரதம் இருக்கிறாள்.

மேலும் கடுமையான தவம் செய்து இச்சா, கிரியா, ஞான சக்திகளைப் பெற்று அருள் புரிகிறாள். விரதத்துடன் மஞ்சள் உடை அணிந்து அருள் பொங்கும் முகத்துடன், வேண்டும் வரங்களை வாரி வழங்கி மகிழும் அம்மனைக் காண தினமும் லட்சக்கணக்கான மக்கள் இங்கு வருகை புரிகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் மாசி கடைசி ஞாயிறு அன்று ஸ்ரீமாரியம்மன் உலக நன்மைக்காக பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள். இந்த விரத நாட்கள் மொத்தம் 28 நாட்களாகும். இந்த காலங்களில் அம்மனுக்கு தளிகை நெய்வேத்தியம் கிடையாது.

இந்த விரத நாட்களில் துள்ளு மாவு, திராட்சை, ஆரஞ்சு, இளநீர் பானகம் போன்றவை மட்டும் அம்மனுக்கு நிவேதிக்கப்படுகிறது. இந்த விரதம் இனிதே நிறைவேற மூலஸ்தான அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்வதே பூச்சொரிதல் என்று அழைக்கப்படுகிறது.

#கோயில்_திருவிழா
சித்திரைத்தேர் திருவிழா, பூச்சொரிதல் விழா, பஞ்சப்பிரகாரம், தைப்பூசம் 11 நாள் திருவிழா, தமிழ், ஆங்கில வருடபிறப்பு, விஜய தசமி, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேஷங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இந்நாட்களில் அம்மன் தங்கரதத்தில் வரும் போது ஏராளமான பக்தர்கள் கண்டுகளிக்கின்றனர்.

#வேண்டுதல்
இத்தலத்து அம்மனிடம் என்ன வேண்டினாலும் அதை நிறைவேற்றி கொடுப்பதாக கூறுகிறார்கள். சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள் என்ற முதுமொழிக்கு ஏற்றபடி பக்தர்களின் வேண்டுதல்களை எங்கிருந்து வேண்டிக்கொண்டாலும் நிறைவேற்றி கொடுக்கிறாள்.

கண்ணில் பிரச்சனை, கைகால் குடைச்சல், நெஞ்சுப் பகுதியில் வலி, குழந்தை பாக்கியம் இல்லை என்று கண்ணீர் விடுபவர்கள், திருச்சி சமயபுரத்துக்கு வந்து, உடலில் எந்த பாகத்தில் பிரச்சனையோ… அந்த உருவத்தை காணிக்கையாகச் செலுத்தி வேண்டிக்கொண்டால்… விரைவில் குணமாகும். தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம்.

#நேர்த்திக்கடன்
மொட்டை அடித்தல், அர்ச்சனை, அபிஷேகம், காது குத்துதல், தங்கரதம் இழுத்தல், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், அங்கபிரதட்சணம், கரும்பு தொட்டில் பிரார்த்தனை, காணிக்கை, தைப்பூசத் திருவிழா மாவிளக்கு எடுத்தல், நெல் காணிக்கை, ஆடு, மாடு, கோழி, தானியங்கள் செலுத்தல் இவை தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கலாம்.

#கோயில் பிரசாதம்
அம்பாள் சிவ ரூபமாகக் கருதப்படுவதால், விபூதி விசேஷப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

Previous Post

திருவாரூர் தியாகராஜர் கோயில் – தல வரலாறு

Next Post

திருமாலின் சுதர்சன சக்கரத்தின் சுழல்வேகம் எவ்வளவு?

Next Post
What is the rotational speed of Thirumal's Sudarsana Chakra

திருமாலின் சுதர்சன சக்கரத்தின் சுழல்வேகம் எவ்வளவு?

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »