தியானமில்லாமல் ஞானம் சாத்தியமா ?
எல்லா நதிகளும் கடலை நோக்கித்தான் பாய்கிறது
அது போல் தேடல் உள்ள எல்லோரும் இறுதியில் சென்று சேர்வது ஞானக் கடலைத்தான்
எனவே ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தங்களுக்காண பாதையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு
நீங்கள் பின்பற்றுவது தவறான பாதை என்று யாரும் யாருக்கும் சுட்டிக்காட்டுவது தவறான செயல்தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை
#சத்தியத்தை_தேடும்
#ஒரு_உண்மையான_ஆத்மீகனுக்கு #சரியான_பாதை_கிடைத்தே_தீரும்
ஆனால் அவன் எந்த இடத்திலும் தனது தேடலை மட்டும் நிறுத்தவே கூடாது
தேடுவதை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும் என்று கூறி நம்மை வழி நடத்தும் இன்றைய ஞானிகள் கூட ஒரு காலத்தில் மிகத் தீவிரமாய் தேடியலைந்தவர்கள்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது
நாம் எப்பொழுதுமே வார்த்தைகளுக்குள் சிக்கிக் கொண்டு வெளிவர முடியாமல் தவிக்கிறோம்
ஓஷோவைப் பின்பற்றுபவர்கள் அவர் கூறிய வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு காலத்தை வீணாக்கிவிடுகின்றனர்
ஆனால் ஓஷோ ஞானம் அடைவதற்கு முன்பாக எப்படி வாழ்ந்தார் என்று படித்துப் பாருங்கள்
அவர் தேடலின் வீரியத்தை ஆராய்ந்தால் நீங்கள் சிலிர்த்துப் போவீர்கள்
இலக்கு நோக்கி வீசப்பட்ட அம்பு போல் மிகவும் கூர்மையாக வாழ்ந்திருக்கிறார்
கல்லூரி நாட்களில் தன்னிடம் காதலைத் தெரிவிக்க வந்த பெண்ணிடம் கூட
உன் காதலை ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்த சிரமும் இல்லை ஆனால் அதற்கு முன்பாக நான் சத்தியத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன் அதைக் கண்டடைந்தவுடன் ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறி மறுத்திருக்கிறார்
தொட்டதற்கெல்லாம் ஓஷோ வார்த்தைகளைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு இலக்கண ஆசிரியர்கள் போல் பிழை திருத்தப் புறப்படும் புண்ணியவான்கள்
ஓஷோ வாழ்ந்த சூறாவாளி வாழ்வை மட்டும் புறக்கணித்து விடுகின்றனர்
அவர் வாழ்ந்த அந்த வாழ்வின் அசுரத்தனமான தேடலின் ஒருதுளியாவது நாம் வாழ்கிறோமா என்று நம்மை நாமே சரிபார்த்துக் கொள்வது நமது கடமையாகும்
அப்படி வாழாமல் ஓஷோ பேசிய வார்த்தைகளை மட்டும் தூக்கிப் பிடித்துக் கொண்டு தங்களை ஞானத்தின் பிழம்பாய் காட்டிக் கொள்வது மடமையல்லவா
தியானத்தைவிடு ஞானத்தைப் பெறு என்பது நூறுசதவிகிதம் எல்லோருக்கும் சாத்தியம்தான்
ஆனால்
அதற்கு நீங்கள் பல பிறவிகள் காத்திருக்க வேண்டும்
சென்னையைச் சென்று சேர்வதுதான் நமது இலக்கு என்று தெரிந்துவிட்டால்
நீங்கள் நடந்தும் செல்லலாம்
தவழ்ந்தும் செல்லலாம்
ஓடியும் செல்லலாம்
வாகனத்திலும் செல்லலாம்
விமானத்திலும் செல்லலாம்
உங்களை விமானத்தில் செல்ல வைப்பதுதான் ஓஷோவின் தியான யுக்திகள்
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் இலக்கைச் சென்றடைய தியானம்தான் மிகச் சிறந்த குறுக்கு வழி
ஓஷோவின் தியானங்கள் உங்களின் பல பிறவிகளை வேரறுக்கும் வல்லமை பெற்றவை
இல்லை நான் தவழ்ந்துதான் செல்வேன் என்று நீங்கள் அடம்பிடித்தால் தாராளமாக தவழ்ந்து வாருங்கள்
அதைத் தடுக்க யாருக்கும் அருகதை இல்லை
ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்
காலம் மிகப்பெரியது
இந்தப் பிறவியில் தவற விட்டால் நீங்கள் பல பிறவிகளில் தவறவிட நேரிடும்
ஓஷோ எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பாக தான் ஞானம் அடைய மூன்றே நாட்கள் இருக்கும் பட்சத்தில் கொல்லப்பட்டுவிட்டதாகக் கூறியிருக்கிறார்
அப்படிக் கொல்லப்படாமல் இருந்திருந்தால் தான் அந்தப் பிறவியிலேயே ஞானம் அடைந்திருக்க முடியும் என்று கூறுகிறார்
எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பாக அவர்
தான் ஒரு சங்கல்பம் எடுத்துக் கொண்டதாகவும்
அதில் இருபத்தியோரு நாள் கடுமையான தவம் மேற்கொண்டதாகவும் பதினெட்டாவது நாளின் முடிவில் தான் கொல்லப்பட்டதால் மீதமிருந்த அந்த மூன்று நாளை தான் இந்தப் பிறவியில் கழித்ததாகவும் கூறியிருக்கிறார்
ஆம் அவர் இந்தப் பிறவியில் பிறந்து மூன்று நாட்களாக தாய்ப்பால் உட்பட எதுவுமே அருந்தவில்லை என்று அவரின் தாயாரே கூறியிருக்கிறார்
வெறும் மூன்று நாட்களைத் தவறவிட்டதற்க்காக ஓஷோவே எழுநூறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது என்று சொல்லும் போது
நமது நிலைமையை நினைத்துப் பாருங்கள்
இதில் நீங்கள் தியானமே செய்ய வேண்டாம் எல்லாம் தானாகவே நிகழும் என்று கூறுவோரை நினைத்துச் சிரிக்காமல் என்ன செய்வது
தானாகவே நிகழும் என்பது உண்மைதான் ஆனால் அதற்குப் பல ஆயிரம் பிறவிகள் கூட ஆகலாம்
நீங்கள் இந்தப் பிறவியில் தவறவிட்டால் பிறகு எந்தப் பிறவியில் தேடிக் கண்டடைவீர்கள் என்பதை உங்களால் அறுதியிட்டுக் கூறவே முடியாது
அதனால்தான் வள்ளுவன் பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தாதார் இறைவனடி சேராதார் என்று கூறிச் சென்றிருக்கிறார்
உண்மையில் மனிதப் பிறவி என்பது பெருங்கடல்தான் அதைக்கடக்க நீங்கள் எந்த வழிமுறையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம்
அதை நீங்கள் நீந்திக் கடக்கிறீர்களா?
பரிசலில் செல்கிறீர்களா?
கப்பலில் செல்கிறீர்களா?











