1740 ஜனவரி மாதம் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மா மகாராஜாவின் படைவீரர்களின் ஒரு பிரிவினர் குளச்சலில் டச்சுப்போர் வீரர்களுடனும்,
மற்றொரு பிரிவினர் வடக்கே காயங்குளம் மன்னரிடமும் போரிட்டு கொண்டிருந்த சமயம் பார்த்து ஆர்க்காடு நவாப்பான சந்தாசாகிப் அவரது சுகோதரர் போடாசாகிப் மற்றும் படைத்தளபதி சப்தர் அலிகான் ஆகியோர் நாஞ்சில் நாட்டை நோக்கி படையெடுத்து வந்தனர்.
வெற்றி பெற்ற நவாப் தனது படையோடு பழையாற்றை கடந்து சுசீந்திரத்தை வந்தடைந்தனர்.
ஈத்தங்காட்டில் போர் நடந்து வந்த வேளையில் உள்ளூர் பொதுமக்கள் கோயில் சம்பந்தப்பட்ட பொருட்களை கருவறைக்குள் இட்டு பூட்டி சுவரெழுப்பி பாதுகாத்தனர்.
அந்த சமயம் 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலையை காப்பாற்ற மண்ணுக்குள் புதைத்து மறைத்து வைத்தனர். 2 நூற்றாண்டுகளாக யாருமே புதைந்து கிடந்த ஆஞ்சநேயரை எடுத்து நிறுத்தி வைக்க முன்வரவில்லை.
சித்திரை திருநாள் மன்னர் மகாராஜாவாக பொறுப்பேற்றதும் ஆஞ்சநேய சுவாமி மண்ணிற்குள் இருந்து எடுக்கப்பட்டு வட கிழக்கு மூலையில் 1930மே 2ம்தேதி (1105சித்திரை19) நிறுவப்பட்டார்.
சுசீந்திரம் ஆஞ்சநேயர் பெருமான் தங்களுக்கு பூரண ஆசி வழங்க வேண்டும் என வேண்டுகிறேன்.
உங்கள் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் பார்வேர்டு செய்யவும். இந்தப் பதிவு அவர்களுக்கு மிக உபயோகமாக இருக்கும்.
இதுவும் ஒரு வகையான ஞானதானம் (அந்தப் புண்ணியம் உங்களுக்கு வந்து சேரும்) அனைவரும் இறைவன் காட்டும் வழியையும் வழிமுறைகளையும் பின்பற்றுவோர் சிக்கலில் இருந்து வெளி வந்து விடுகின்றனர் – என்றும் இறைபணியில் சித்தர் பூமி











